கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய அணி வீரர்கள்.? காரணம் தெரியுமா.?

black

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் இந்திய அணியை பேட் செய்ய பணித்தார். அதன்படி முதல் இன்னிங்க்ஸை துவங்கிய ராகுலும் தவானும் நிதானமாக சென்ற போட்டிகளில் செய்த தவறுகளை போன்று இப்போட்டியில் நடைபெற கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

black 1

இந்த போட்டியில் இந்திய அணி ஓப்பனர்கள் இருவரும் கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடினார்கள். இதற்கு கரணம் என என்று இப்போது நமக்கு தெரிந்து இருக்கிறது. ஏனென்றால், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மறைந்தார். அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவிக்கும் விதமாக இந்திய அணி இந்த பேட்ஜ் அணிந்து ஆடி வருகிறது.

அஜித் வடுகர் இந்திய அணிக்காக 37 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மண்ணில் இவரது தலைமையில் தான் இந்திய அணி முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. எனவே இவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இன்று துவங்கிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடி வருகிறார்கள்.

black 2

இந்திய அணியில் துவக்க வீரர் விஜய்க்கு பதிலாக தவானும், கார்த்திக்கு பதிலாக பண்ட், குலதீப் பதிலாக பும்ராவும் இடம்பிடித்துள்ளனர்.