CSK vs KKR : நேற்றைய போட்டியில் சேப்பாக்கத்தில் ஒலித்த தல அஜித்தின் பாடல் – எந்த பாடல் தெரியுமா ?

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா

Dhoni-Csk
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Chahar

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

Gill

இந்த போட்டியின் இடைவேளைகளில் தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படும் அஜித் குமார் அவர்களின் சமீபத்திய திரைப்படமான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சித்தூக்கு அடிச்சுதூக்கு என்ற பாடல் ஒலிபரப்பானது. இந்த பாடலை அரங்கில் இருந்த அனைத்து ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடினர்.

Duplesis

கிரிக்கெட்டுக்கு எப்படி தல தோனிக்கு ஒரு கூட்டம் இருக்கிறதோ அதேபோன்று தமிழ் சினிமாவில் தல அஜித் குமாருக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை நேற்றைய போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் தெரியும்.

Advertisement