டெஸ்ட்டும் பண்ணுவீங்க. ரூல்ஸையும் போடுவீங்களா ? என்னய்யா உங்க நியாயம் – ஐ.சி.சி க்கு எதிராக குரல் எழுப்பிய அகர்கர்

Agarkar
- Advertisement -

கொரோன வைரஸ் எச்சில் மூலம் பரவுவதன் காரணமாக ஐசிசி இனி விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த முடிவிற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு சாரார் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த விதிமுறை முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக அமையவுள்ளது என்று பல்வேறு பந்துவீச்சாளர்களும் புலம்பி வருகின்றனர்.

ind

- Advertisement -

மேலும் ஐசிசி இந்த விதியுடன் சேர்த்தே உடல்நலம் சார்ந்த, வீரர்களை கருத்தில் கொண்டு பல முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது ஐசிசி. இந்த விதியில் ஒன்றுதான் எச்சில் தடவ கூடாது என்ற விதி. பந்தில் எச்சில் தடவவில்லை என்றால் பந்து பெரிதாக ஸ்விங் ஆகாது இதனால் போட்டி பேட்ஸ்மேனுக்கு இன்னும் ஆதரவாக மாறிவிடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய விதி குறித்து ஏற்க்கனவே பும்ரா மற்றும் ஸ்டார்க் போன்ற வீரர்கள் தங்கள் கருத்தினை நேரடியாக ஐ.சி.சி க்கு தெரியப்படுத்தினர். இப்படி பல முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்த புதிய விதிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்நிலையில் தற்போது இந்த விடயம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அகர்கர் கூறுகையில் :

Agarkar-2

தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகுதான் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். எனவே கொரோனா உறுதி இல்லை என்ற உறுதியான பிறகுதான் அவர்கள் போட்டியில் பங்கேற்பதால் பந்தை எச்சிலால் அனுமதி குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இதுகுறித்து மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் விரிவாக கருத்து தெரிவிக்க முடியும். தற்போது உள்ள சூழலில் எச்சிலை கொண்டு பந்தை சுத்தப்படுத்துவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்திருக்கிறது. இருப்பினும் பவுலர்களால் பந்து எச்சில் பயன்படுத்தாமல் பந்து வீசவே முடியாது.

Ball

இதுகுறித்து முடிவான பதிலினை இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் நிச்சயம் யோசிக்க வேண்டும். அந்த தொடரின் முடிவுகளை பொறுத்து மறுபரிசீலனை செய்யலாம் என்று அகர்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலகில் உள்ள பல்வேறு முன்னணி பந்துவீச்சாளர்கள் இதே போன்ற கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement