மத்த எல்லோரையும் விட இந்த பையன் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பான் – அகார்க்கர் உறுதி

Agarkar
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானங்களில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறு வதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று மைதானங்களில் மட்டுமே வைத்து நடத்தப்பட்டது. இதற்காக பிசிசிஐ 100 கோடி ரூபாய் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஐபிஎல் தொடர் இந்தியாவிற்கு பல புதிய இளம் வீரர்களை கண்டறிந்து கொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

ipl trophy

- Advertisement -

தங்கராசு நடராஜன், வருன் சக்கரவர்த்தி, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி போன்ற பல புதிய இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்திருக்கின்றர். இதில் நடராஜன் இந்தியா டி20 அணியில் இடம் பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல வீரர்களை பற்றி பேசினாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகியின் பந்துவீச்சை பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. தற்போது இது குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர். மேலும் இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் செயல்பட்டது குறித்து பெருமைப்பட பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

tyagi

நான் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகவும் ரசித்து ஒருவரைப் பார்த்தேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய கார்த்திக் தியாகி மிகச் சிறப்பாக பந்து வீசினார். ஒரு இளம் பந்துவீச்சாளர் ஐபிஎல் அணியில் இடம்பிடித்து பந்து வீசுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக இருந்தது.

rr

அவருக்கு இந்த ஐபிஎல் தொடர் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்த அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பார் மற்றவர்களுக்கு முன்னால் விரைவில் இவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிவித்திருக்கிறார் அஜித் அகர்கர்.

Advertisement