தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் மர்மம் இருக்கிறது – அஜித் அகார்கர் குற்றச்சாட்டு

Agarkar

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நடப்பு பதிமூன்றாவது ஐபிஎல் சீசனில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. ஒருபுறம் மும்பை அணி பலமாக இருக்க மறுபுறம் இந்த தொடர் முழுவதுமே அனைத்து அணிகளும் தடுமாற்றத்தை கண்டுவந்தனர். குறிப்பாக கடந்த பல தொடர்களாக சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த படம் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றியது.

mi

மேலும் இந்த சீசனின் முதல் பாதியில் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் இரண்டாவது பாதியின் போது நீக்கப்பட்டார். சிறப்பாக கேப்டன்சி செய்து வந்த அவருக்கு பதிலாக உலகக்கோப்பையை வென்ற கேப்டன் இயான் மோர்கனை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனாக மாற்றியது. மேலும் பிளேஆப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை கையில் வைத்திருந்த கொல்கத்தா அணி அதன் பின்னர் அந்த வாய்ப்பையும் இழந்தது.

இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கொல்கத்தா அணியின் இந்த கேப்டன் மாற்றத்திற்கு பின்னர் உள்ள மர்மத்தை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கொல்கத்தா அணி சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் என நான் நம்பினேன். ஏனெனில் பல திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

Karthik

ஏனெனில் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்று அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கம்மின்ஸ், உலக கோப்பையை வென்ற கேப்டன் மோர்கன், அதிரடிக்கு பெயர் போன ரசல், பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் அசத்தலாக செயல்படும் நரேன் ஆகியோர் இருக்கும்போது கொல்கத்தா அணி மிக சிறப்பாக விளையாடும் என்று நினைத்தேன். அது மட்டுமின்றி உள்ளூர் வீரர்களும் சிறப்பாக இருந்ததால் இன்னும் சிறப்பாக அவர்களால் விளையாடி இருக்க முடியும்.

- Advertisement -

ஆனால் அணி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது கேப்டனை மாற்றினார்கள். இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்கிறேன். அணிக்குள் எங்கோ தவறு நடந்திருக்கிறது இதேபோல முந்தைய காலகட்டத்தில் நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றார்கள். ஆனால் இப்போது அப்படி நிகழவில்லை.

Morgan

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். சரியான திட்டமிடலுடன் வீரர்கள் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். கொல்கத்தா அணியின் தரத்திற்கு இந்த தொடர் மோசமானது என்றே தான் கருதுவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.