இந்திய அணிக்கு இதுமாதிரி ஒரு வீரர் வேணும். அவரை செலக்ட் பண்றதுதான் பர்ஸ்ட் டியூட்டி – அகார்கர் எடுக்கவுள்ள முதல் நடவடிக்கை

Ajit-Agarkar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்த சேத்தன் சர்மா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியான ஒரு வீடியோவில் இந்திய வீரர்கள் குறித்து பேசிய சர்ச்சையான விடயங்களை பேசி பிரச்சினையில் சிக்கியதால் தனது தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஷிவ் சுந்தர் தாஸை தற்காலிக தேர்வுக்குழு தலைவராக நியமித்தது.

Agarkar

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தற்காலிக தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்த ஷிவ் சுந்தர் தாசின் செயல்பாடுகள் மீது திருப்தியில்லாத பிசிசிஐ அண்மையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவருக்கான தேடலை தீவிர படுத்தியது.

அந்த வகையில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர்களில் ஒருவரையே புதிய தேர்வுக்குழு தலைவராக்க பிசிசிஐ விரும்பியது. அந்த வகையில் முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர், நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் அகார்கர் போன்றவர்களின் பெயரை பரிசீலித்தது. ஆனால் இந்த தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான சம்பளம் மிகவும் குறைவு என்பதனால் எந்த ஒரு வீரரும் இந்த பதவிக்கு ஆர்வம் காட்டவில்லை.

Hardik Pandya

இந்நிலையில் அஜித் அகார்கர் மட்டும் இந்த பதவியின் மீது நாட்டம் காட்டியதால் பிசிசிஐ அவரை புதிய தேர்வுக்குழு தலைவராக நியமித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியை முதல் முறையாக தற்போது அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் அகார்கர் இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் ஒரு தரமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தேர்வுசெய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்துள்ளாராம். ஏனெனில் தற்போதைய நிலையில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா மட்டுமே அணியில் இடம்பிடித்து வருகிறார்.

இதையும் படிங்க : வீடியோ : எப்போ தான் திருந்துவிங்க, பயிற்சி போட்டியிலும் அதே வேலையை செய்த விராட் கோலி – ரசிகர்கள் அதிருப்தி

அதிலும் டி20 போட்டிகளில் மட்டுமே முழுவதுமாக பந்துவீசும் அவர் ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக அவ்வளவாக பந்துவீசுவதில்லை. எனவே ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தேர்வு செய்வதையே அவர் தனது முதல் பணியாக கருத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement