- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை சேர்த்தது ஏன்? விளக்கம் கொடுத்த – அஜித் அகார்கர்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டு முக்கிய போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளிலும் பங்கேற்காத அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். இரண்டு போட்டிகளின் போது ஓய்வெடுத்துக் கொண்டார்.

பும்ராவை தேர்வு செய்தது ஏன்? : அஜித் அகார்கர்

அதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற விளையாடி வரும் அவர் லீக் சுற்றின் முதல் 2 போட்டிகளில் விளையாடிய வேளையில் மூன்றாவது போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொண்டார். அதன்பின்னர் சூப்பர் போர் சுற்றில் 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் கடைசி போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டு இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று வெளியான இந்த அணியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரே தானாக முன்வந்து தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியதால் அவருக்கு இந்த தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது ஒருவேளை அவரை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்று நிர்வாகம் நினைத்தால் முதல் போட்டியில் ஓய்வு கொடுத்து விட்டு இரண்டாவது போட்டியில் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஏற்கனவே ஜஸ்ப்ரீத் பும்ரா தன்னுடைய பிசியோதெரபிகள், டிரெய்னர்ஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் தனது உடற்தகுதி குறித்து பேசியிருப்பார். அதுமட்டும் இன்றி அவர்களின் ஆலோசனையின் படியே அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார். தற்போது அவரது உடற்தகுதி சிறப்பாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன் – அஜித் அகார்கர் விளக்கம்

நாங்களும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான் இருந்தாலும் அணிதான் நமக்கு எப்போதும் முக்கியம் என அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -