என்னதான் நாம ஜெயிச்சிருந்தாலும், நம்ம டீம் தொடர்ந்து இந்த தப்பை பண்றாங்க – அஜித் அகார்கர் கருத்து

ajit agarkar umran malik
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இந்தூரில் நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அந்த போட்டியிலும் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்கிற கணக்கில் கைப்பற்றியது. அதன்படி நடைபெற்று முடிந்த அந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது அபார சதத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணியானது 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்ததால் இறுதியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோன்று தொடரையும் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆனாலும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டேவான் கான்வே இந்திய பவுலர்களை எளிதாக கையாண்டு 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மொத்தம் 100 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 138 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு தனி ஒரு ஆளாக பயத்தை காண்பித்தார்.

Devon Conway

இறுதியில் அவர் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டம் இழந்த பிறகு தான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரை வெற்றி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஒரு தவறினை செய்து வந்ததுள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகார்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

இந்திய அணி என்னதான் இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றிருந்தாலும் கடை நிலை பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்க பவுலர்கள் திணறுவது உண்மைதான். ஏனெனில் முதல் போட்டியில் மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 142 ரன்கள் அடித்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பயத்தை காட்டினார். அதேபோன்று கடைசி போட்டியிலும் டேவான் கான்வே 100 பந்துகளில் 138 ரன்கள் அடித்து இறுதிவரை இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி தம்பதிக்கு திருமண பரிசாக விலையுயர்ந்த பரிசை வழங்கிய – தல தோனி

இப்படி அனைத்து போட்டிகளிலும் ஒரு வீரரை ஆட்டமிழக்க வைக்க இந்திய அணி போராடுவது தொடர்கதை ஆகிவிட்டது. குறிப்பாக டாப் ஆர்டரில் பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்தினாலும் இறுதி கட்டத்தில் விக்கெட் வீழ்த்த இந்திய பவுலவர்கள் திணறி வருகின்றனர் இதனை சரி செய்தாக வேண்டும் என அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement