அவரோட மதிப்பு தெரியாம பேசாதீங்க. சைலன்ட்டா எவ்ளோ பண்ணிட்டு வராரு – இந்திய பவுலரை பாராட்டிய அகார்கர்

Agarkar
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 513 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய வங்கதேச அணியானது 324 ரன்களை மட்டுமே குவித்ததால் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு அனைவரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Umesh Yadav

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும் மீண்டும் டெஸ்ட் தொடரில் சிறப்பான செயல்பாட்டிற்கு திரும்பியுள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் 35 வயது இந்திய வீரரான உமேஷ் யாதவை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகார்கர் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக உமேஷ் யாதவ் கடந்த பல ஆண்டுகளாகவே சத்தம் இன்றி தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்திய அணியின் அனைத்து கேப்டன்களுக்கும் வழங்கியிருக்கிறார். அவர் இவ்வளவு நன்றாக செயல்பட்டும் அவரின் மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஆனாலும் அவருடைய திறமைக்கான அங்கீகாரம் இந்திய அணியில் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

Umesh Yadav 1

இத்தனை ஆண்டுகள் விளையாடியும் அவரிடம் இருந்த வேகம் இன்னும் குறையவில்லை. நிச்சயம் அவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்கள் எப்பொழுதெல்லாம் விக்கெட்டை எதிர்பார்க்கிறார்களோ அந்த முக்கிய தருணத்தில் விக்கெட்டை எடுத்து சத்தம் என்று ஒரு பெரிய வீரராகவே இருந்து வருகிறார். அவருடைய விக்கெட் நம்பர்களை பார்த்தாலே அது நமக்கு புரியும்.

- Advertisement -

ஏனெனில் ஆசிய மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுப்பது கடினம் என்றாலும் உமேஷ் யாதவ் ஆசிய மைதானங்களில் மிகச்சிறப்பாக பந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், இம்ரான் கான் ஆகியோரை அடுத்து உமேஷ் யாதவ் மிகக்குறைந்த போட்டிகளிலேயே 110 விக்கெட்டுகளை ஆசிய மைதானங்களில் எடுத்துள்ளார் என்று அதனை குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலம் : சிஎஸ்கே குறி வைத்து வாங்க அதிக வாய்ப்புள்ள 5 தமிழக வீரர்கள் – லிஸ்ட் இதோ

அஜித் அகார்கர் கூறியது போலவே : நிச்சயம் உமேஷ் யாதவ் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்றே நாம் கூறலாம். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 52 போட்டியில் விளையாடி 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement