ஐபிஎல் 2023 ஏலம் : சிஎஸ்கே குறி வைத்து வாங்க அதிக வாய்ப்புள்ள 5 தமிழக வீரர்கள் – லிஸ்ட் இதோ

Sanjay
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 405 வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதில் தரமான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போடும் அணிகளுக்கு மத்தியில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ராவோ, உத்தப்பா போன்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய தீவிரம் காட்ட உள்ளது. மேலும் சமீப காலங்களாகவே தமிழில் பெயரை வைத்துக் கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் அந்த அணி சந்தித்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே வாங்கிய அபராஜித், சாய் கிசோர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் பெஞ்சில் அமர வைத்து கேரியரைக் கெடுக்கும் வேலையிலும் சென்னை ஈடுபட்டது. அதனால் தமிழக ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ள அந்த அணி நிர்வாகம் இம்முறை அதை தணிக்க நிறைய தமிழக கிரிக்கெட் வீரர்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையில் இந்த ஏலத்தில் சென்னை வாங்குவதற்கு போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படும் சில தமிழக வீரர்கள் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஜி அஜிதேஷ்: இளம் தமிழக வீரர்களை அடையாளப்படுத்தும் டிஎன்பிஎல் தொடரின் 2022 சீசனில் அசத்திய வீரர்களில் ஒருவராக அறியப்படும் இவர் சில போட்டிகளில் அதிரடியான பினிஷிங் செய்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதனால் சயீத் முஸ்டாக் அலி கோப்பையிலும் அறிமுகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 20 வயது மட்டுமே நிரம்பியவர் என்பதால் குறைந்த விலைக்கு வாங்கி வரும் காலங்களில் சென்னை வாய்ப்பு கொடுக்க முயற்சிக்கலாம்.

- Advertisement -

4. மணிமாறன் சித்தார்த்: சமீப காலங்களாகவே உள்ளூர் அளவில் இடது கை சுழல் பந்து வீச்சாளராக அசத்தி வரும் இவர் இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகளில் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்தாலும் இதுவரை களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை.

இருப்பினும் இளம் வீரரான இவர் இதுவரை 7 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 4.68 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார். ஏற்கனவே சாய் கிசோரை தவற விட்ட சென்னை நிர்வாகம் ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக வருங்கால இந்திய ஸ்பின்னர் இல்லாத காரணத்தால் இவரை வாங்க முயற்சிக்கலாம்.

- Advertisement -

3. சூர்யா: மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான இவரும் இந்த வருட டிஎன்பிஎல் தொடரில் 9 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை 6.03 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து அசத்தலாக செயல்பட்டார். மேலும் மஹீஸ் தீக்சனா சென்னை அணியில் இருந்தாலும் ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி போன்ற தமிழக ஸ்பின்னரை நழுவ விட்ட அந்த அணி நிர்வாகம் இம்முறை இவரை மிகவும் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு முயற்சிக்கலாம்.

2. சஞ்சய் யாதவ்: சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் 2022 டிஎன்பிஎல் தொடரில் 452 ரன்களை 186.77 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

- Advertisement -

அதே போல் சுழல் பந்து வீச்சாளராக 6 விக்கெட்டுகளை சாய்த்த இவரை ஏற்கனவே வாங்கியிருந்த மும்பை நிர்வாகம் கழற்றி விட்டது. அதனால் இம்முறை அவரை குறைந்த விலைக்கு சென்னை நிர்வாகம் கண்டிப்பாக வாங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

1. நாராயண் ஜெகதீசன்: தொடக்க வீரரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் ஏற்கனவே சென்னை அணியில் வாங்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு 7 போட்டிகளில் நிலையற்ற வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு கழற்றி விடப்பட்டார். அந்த நிலைமையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி சரவெடியாக விளையாடிய இவர் 277 ரன்களை விளாசி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: வீடியோ : ஒரு குறை மட்டும் இருக்கு, முதல் டெஸ்ட் முடிந்ததும் வெறித்தன பயிற்சி செய்த விராட் கோலி – காரணம் என்ன

அத்துடன் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையிலும் அதிரடியாக பேட்டிங் செய்யும் இவர் தற்போது ஏன் விடுவித்தோம் என்று சென்னை வருந்தும் அளவுக்கு அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் நிச்சயமாக இந்த ஏலத்தில் சென்னை வாங்குவதற்கு முயற்சிக்கப் போகும் முதல் தமிழக வீரராக ஜெகதீசன் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement