- Advertisement -
இந்திய கிரிக்கெட்

போன மாசமே சொல்லிட்டாரு.. அஸ்வின், ரோஹித்துக்கு பின் கோலி ஓய்வாக இதான் காரணம்.. அகர்கர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் மாதம் துவங்கும் அந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி கழற்றி விடப்பட்டுள்ள நிலையில் ஓய்வு காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் இந்தியாவின் தோல்விக்கு காரணமான அவர்களை இங்கிலாந்து தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓய்வு பற்றி விராட் கோலி கடந்த ஏப்ரல் மாதமே தம்மிடம் தெரிவித்து விட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஓய்வுக்கான காரணம்:

200% பங்களிப்பை கொடுத்து அர்ப்பணிப்புடன் விளையாடக்கூடிய விராட் கோலி தமக்கென்று ஒரு தரத்தை நிர்ணயித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த தருணத்துக்கு நிகராக விளையாட முடியவில்லை என்று விராட் கோலி கருத்தியதாலேயே ஓய்வு பெற்றதாகவும் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி போன்றவர் ஓய்வு பெற்றால் நிரப்புவதற்கு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும்”

“சில மாதங்களுக்கு முன்பாக அஸ்வின் ஓய்வு பெற்றார். அவர்களைப் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரங்கள். அவர்கள் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால் அது மற்றொருவருக்கான வாய்ப்பாகும். ரோஹித், விராட் கோலியிடம் சில மாதங்களுக்கு முன்பாகவே நான் பேசினேன். விராட் கோலி கடந்த ஏப்ரல் மாதமே என்னைத் தொடர்பு கேரியரை முடிக்க விரும்புவதாக சொன்னார்”

- Advertisement -

அகர்கர் மரியாதை:

“ஒவ்வொரு பந்திலும் அவர் 200% பங்களிப்பை கொடுப்பதை நாம் பார்த்துள்ளோம். தம்மால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ள அவர் கடந்த பல வருடங்களாக தமக்கென்று தரத்தை உருவாக்கி வைத்துள்ளார். எனவே இதுவே அவர் விடை பெறுவதற்கான நேரமாக இருக்கலாம். இந்த கடினமான முடிவை எடுத்த ரோஹித், விராட் கோலியை நீங்கள் மதிக்க வேண்டும். அவர்களைப் போன்ற கிரேட் பிளேயர்கள் தங்களுக்குத் தாங்களே உண்மையுடன் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: இதுவே பெருசுன்னு போவீங்களா.. ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படாதது ஏன்? அகர்கர் பேட்டி

“123 போட்டிகளில் விளையாடிய ஒருவர் ஓய்வு பெறும் போது கண்டிப்பாக பெரிய வெற்றிடம் ஏற்படும். ஆனால் அது மற்றொருவருக்கான வாய்ப்பாகும். ரோஹித் சர்மாவும் கடந்த சில வருடங்களாக கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் தற்போது புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிறது. அதனால் நீங்கள் புதிதாக செயல்பட வேண்டும். அதே சமயம் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அந்த 3 வீரர்களும் மரியாதைக்குரியவர்கள். இது அவர்களுடைய இடத்தில் மற்றவர்கள் வாய்ப்பு பெறும் நேரமாகும்” என்று கூறினார்.

- Advertisement -