இதுவே பெருசுன்னு போவீங்களா.. ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படாதது ஏன்? அகர்கர் பேட்டி

Ajit Agarkar
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் தொடர் ஜூன் மாதம் இங்கிலாந்தில் துவங்குகிறது. அந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அது பல ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் வெளிநாட்டு மண்ணில் எப்போதும் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்திராத அவர் கேப்டன்ஷிப் அனுபவத்தையும் கொண்டிருக்கவில்லை. மறுபுறம் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் இல்லாத போது கேப்டனாக அபாரமாக வழி நடத்திய ஜஸ்ப்ரித் பும்ரா 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா இல்லையே:

அப்படிப்பட்ட அவர் ரோஹித் சர்மாவுக்கு பின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவால் இங்கிலாந்தில் 5 போட்டிகளில் முழுமையாக விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். அதனாலேயே பும்ராவை கேப்டனாக நியமிக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அகர்கர் இங்கிலாந்து மண்ணில் அவர் விளையாடுவதே தங்களுக்கு பெரிய மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

இது பற்றி அகர்கர் பேசியது பின்வருமாறு. “3, 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் பும்ரா எவ்வளவு முக்கியமானவர் என்பது எங்களுக்கு தெரியும். விளையாடக்கூடிய போட்டிகளில் அவர் எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார். ஆஸ்திரேலியாவில் சந்தித்த பெரிய பின்னடைவுக்கு பின் அவர் ஃபிட்டாக இருப்பதே எங்களுக்கு மகிழ்ச்சியாகும். தற்சமயத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை நாங்கள் பார்க்கிறோம்”

- Advertisement -

அகர்கர் விளக்கம்:

“மிகவும் சிறப்பாக விளையாடும் அவர் இந்திய அணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்திரேலியாவில் தலைமைத் தாங்கிய அவர் துணைக் கேப்டனாக இருந்தார். ஆனால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாத அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். அப்படிப்பட்ட முக்கியமான ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக இருந்தால் 15 – 16 வீரர்களை நிர்வாகிக்கும் எக்ஸ்ட்ரா பாரத்தை சுமக்க வேண்டியது வரும்”

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழு வீரர்களின் லிஸ்ட் இதோ

“அது உங்களிடம் நிறைய பாரத்தை உண்டாக்கும். எனவே அவர் சாதாரண வீரராக விளையாடுவது சிறந்தது. இதைப் பற்றி தெரிந்த அவர் இந்தச் சூழ்நிலையை சரி என்று ஏற்றுக் கொண்டார். தற்சமயத்தில் தம்முடைய உடல் எப்படி இருக்கிறது என்பது அவருக்கு மிகவும் நன்றாக தெரியும்” என்று கூறினார்.

Advertisement