- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கருண் நாயர் இந்திய கேரியர் முடிந்ததா? வெ.இ தொடரில் கழற்றி விடப்பட்டது ஏன்? அஜித் அகர்கர் பதில்

இந்திய அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனால் அந்த அணியில் கருண் நாயர் நினைத்ததை போலவே கழற்றி விடப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அறிமுகமான அவர் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அதன் பின் சீனியர்கள் வந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளிலும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை.

- Advertisement -

கேரியர் முடிகிறதா:

அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நாயரின் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராத அவே உள்ளூரில் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து தேர்வுக்குழுவின் கதவைத் தட்டினார். அத்துடன் இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் அசத்திய அவருக்கு 8 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்த வாய்ப்பில் 4 போட்டிகளில் 205 ரன்களை 25.63 என்ற சராசரியில் மட்டுமே எடுத்த நாயர் சுமாராக விளையாடினார். குறிப்பாக சாய் சுதர்சனை அறிமுகப் போட்டியுடன் கழற்றி விட்ட இந்திய கிரிக்கெட் அணி அவருக்கு 3வது இடத்தில் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பிலும் அசத்தாத கருண் நாயரை மீண்டும் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சாய் சுதர்சனை தேர்ந்தெடுத்துள்ளது.

- Advertisement -

அகர்கர் விளக்கம்:

மேலும் பேக்-அப் வீரராக கடந்த வாரம் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சதமடித்த தேவ்தூத் படிக்கல் தேர்ந்தெடுத்துள்ளார். அதனால் 8 வருடங்கள் கழித்துப் போராடி கம்பேக் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தத் தவறிய கருண் நாயரின் கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் குறித்து தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: வெ.இ அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

“வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் நாங்கள் நாயரிடம் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தோம். தேவ்தூத் படிக்கல் கொஞ்சம் அதிகமாக அசத்துவார் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் ஒவ்வொருவருக்கும் 15 அல்லது 20 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். துரதிஷ்டவசமாக அது அப்படி வேலை செய்யாது. கடந்த ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடித்த படிக்கல் 2024 இங்கிலாந்து தொடரில் தரம்சாலாவில் விளையாடி அரை சதத்தை அடித்தார். அந்த வகையில் இந்தியாவுக்காக அவர் ஓரளவு நல்ல ஃபார்மை காண்பித்துள்ளார். நாங்கள் கருண் நாயரிடம் இங்கிலாந்தில் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தோம்” என்று கூறினார்.

- Advertisement -