நிராகரிக்கப்பட்ட இடத்திலேயே பதவிக்கான வாய்ப்பினை பெற்றுள்ள அஜித் அகார்கர் – வெற்றிபெறவும் அதிக வாய்ப்பு

Agarkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்த சேத்தன் சர்மா தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய அணியின் வீரர்கள் பற்றியும், நிர்வாகம் பற்றியும் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கினார். இப்படி கையும் களவுமாக பிடிபட்ட அவர் வேறு வழியின்றி தானாக முன்வந்து இந்திய அணியின் தேர்வுக்குழு பதவியையும் ராஜினாமா செய்திருந்தார். அந்த விடயம் அப்போதே இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக இருந்தது.

Chetan Sharma

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் பதவியில் இருந்து வெளியேறிய அவருக்கு பதிலாக இடைக்கால தேர்வுக்குழு தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அடுத்த தேர்வுக்குழு தலைவரை பிசிசிஐ இதுவரை உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தேர்வுக்குழு தலைவருக்கான விண்ணப்பங்கள் அண்மையில் பெறப்பட்டு வந்தன. அந்த பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வீரேந்திர சேவாக் விண்ணப்பித்து இருப்பதாகவும், அதனால் அவரே தேர்வுக்குழு தலைவராக பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும் அப்படி வெளியான செய்திகளும் பொய்யானது என சேவாக் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Agarkar-2

அதோடு தேர்வுக்குழு தலைவருக்கான ஊதியம் மிகவும் குறைவு என்பதால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அஜித் அகார்க்கர் புதிய தேர்வுக்குழு தலைவருக்கான பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் துணைப்பயிற்சியாளராக இருக்கும் அவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நிராகரிக்கப்பட்ட இடத்திலேயே அவர் விண்ணப்பித்துள்ளதாகவும் நிச்சயம் அவர் புதிய தேர்வுக்குழு தலைவராக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : உலக கோப்பை 2023 : முழு அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி – இந்தியாவின் முழு அட்டவணை இதோ

இந்திய அணிக்காக கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள அஜித் அகார்க்கர் 26 டெஸ்ட் போட்டிகள், 191 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement