யார் வேணாலும் லைன், லென்த்ல போடலாம் ஆனால் – வேகத்தில் அசத்தும் உம்ரான் மாலிக் பற்றி அஜித் அகர்கர் பேசியது என்ன

ajit agarkar umran malik
- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்திய நிலையில் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. ஆக்லாந்து நகரில் நடைபெற்ற அப்போட்டியில் 5 பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்திய இந்தியா கடைசி 30 ஓவரில் லாதம் – வில்லியம்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தாலும் அறிமுகமாக களமிறங்கிய உம்ரான் மாலிக் அசத்தலாக செயல்பட்டது ஓரளவு ஆறுதலாக அமைந்தது.

Umran Malik

- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அவர் 2021, 2022 ஆகிய ஐபிஎல் சீசன்களில் தொடர்ந்து 150+ கி.மீ வேகத்தில் மிரட்டலாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்க விட்டு அனைவரது பாராட்டுகளை பெற்றார். அதனால் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவரை தேர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கைகள் குவிந்தது. அந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய அவர் கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். அதன் பின் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரின் ஒரு போட்டியில் விளையாடிய அவர் பங்கேற்ற 2 போட்டியிலும் ரன்களை வாரி வழங்கியதால் அவ்வளவுதான் என்று தேர்வுக்குழு உட்பட அனைவரும் கருதினார்கள்.

வேகம் கிடைக்காது:

ஆனால் ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் அனைவருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் 2 கிரிக்கெட் போட்டியுடன் அவரை கழற்றி விட்டு தவறு செய்து விட்டதாக திலீப் வெங்சர்க்கார், பிரட் லீ, வாசிம் அக்ரம் போன்ற ஏராளமான ஜாம்பவான்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் மீண்டும் தேர்வாகியுள்ள உம்ரான் மாலிக் அளவில் சிறிய ஆக்லாந்து மைதானத்தில் அர்ஷிதீப், ஷார்துல் தாகூர் ஆகிய இதர வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் முழுமையான 10 ஓவர்களை வீசி 66 ரன்களை கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை சாய்த்து 6.60 என்ற எக்கனாமியில் சிறப்பாகவே பந்து வீசினார்.

அதனால் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நாட்கள் செல்ல செல்ல நிச்சயம் நல்ல லைன், லென்த் போன்ற அம்சங்களை கற்றுக்கொண்டு இன்னும் மிரட்டலாக செயல்படுவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் யார் வேண்டுமானாலும் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பயன்படுத்தி பந்து வீசலாம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் அதிகப்படியான வேகத்தை கற்றுக் கொடுத்தாலும் வீச முடியாது என்று கூறியுள்ளார். எனவே தமக்கு இயற்கையாக கிடைத்துள்ள திறமையை உம்ரான் மாலிக் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் போட்டிக்கு பின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகில் நிறைய பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பயன்படுத்தி பந்து வீசுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே 150 வேகத்தில் வீசுகிறார்கள். அது ஒரு ஸ்பெஷலான திறமையாகும். எனவே அந்த இயற்கையான திறமைக்கு நீங்கள் மதிப்பளித்து அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும். அந்த வகையில் அதிரடியான வேகத்தை கொண்டுள்ள அவருக்கு அறிமுகப் போட்டி சிறப்பான நாளாக அமைந்தது. சொல்லப்போனால் அவர் தான் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்து போட்டியை இந்தியாவின் கட்டுக்குள் வைக்க உதவினார். இப்போட்டி நடைபெற்ற மைதானம் வித்தியாசமான அளவுகளைக் கொண்டிருந்த நிலையில் எதிரணி பேட்ஸ்மேன்கள் கடைசியில் நன்கு செட்டில் ஆகிவிட்டதால் தடுத்து நிறுத்த முடியவில்லை”

agarkar

“ஆனாலும் டேவோன் கான்வே – டார்ல் மிட்சேல் ஆகிய 2 முக்கிய வீரர்களை உம்ரான்  மாலிக் தான் அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவர் உங்களுக்கு துருப்புச் சீட்டாக கிடைத்துள்ளார். அவரைப் போன்ற இளம் பவுலர் ஒவ்வொரு பந்தையும் நல்ல லைன் லென்த்தில் வீசுவார் என்று நாம் எதிர்பார்க்க கூடாது. மொத்தத்தில் அறிமுகப் போட்டியில் அசத்திய அவரை வரும் காலங்களில் எதிர்நோக்கி பார்க்க உள்ளேன்” என்று கூறினார். முன்னதாக உம்ரான் மாலிக்கை அவரது வழியில் விளையாடும் வகையில் வாய்ப்பு கொடுத்து ஆதரவு கொடுக்குமாறு ஜாம்பவான் ஜாகீர் கான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement