பயந்தது போதும்.. பழைய காலத்து செலக்டர்ஸ் வேணாம்.. ரூல்ஸை இப்படி மாத்துங்க.. ரஹானே கோரிக்கை

Ajinkya Rahane
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் பிரக்யான் ஓஜா, ஆர்பி சிங் ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பொதுவாகவே ஒரு அணியை தேர்ந்தெடுக்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சில வீரர்கள் கழற்றி விடப்படுவது சகஜமான ஒன்றாகும்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய அணிக்காக அனைவருடைய மனதையும் திருப்திப்படுத்தும் வகையில் வெறும் 11 பேரை தேர்ந்தெடுப்பதும் கடினமாகும். இருப்பினும் இப்போதெல்லாம் தேர்வுக்குழுவின் சில தேர்வுகள் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்க்கும் வகையில் அமைகிறது. எடுத்துக்காட்டாக அர்ஷ்தீப் சிங் 3 வருடங்களில் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பழைய காலத்து ஆட்கள் வேண்டாம்:

இருப்பினும் அவருக்கு இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் அவருக்கு நிலையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மறுபுறம் 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு ஹர்ஷித் ராணா உதவினார். அதனால் பயிற்சியாளராக வந்ததும் கம்பீர் அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளார்.

அந்த வாய்ப்பில் இதுவரை அவர் பெரிதாக இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இது பற்றி பாதிக்கப்பட்ட வீரர் பேசினால் அவரை தேர்வுக்குழுவினர் மொத்தமாக அணியிலிருந்து கழற்றி விடுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட வீரர்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு புதிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அஜிங்கிய ரஹானே கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

ரஹானே கோரிக்கை:

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய வீரர்கள் தேர்வாளர்களுக்காக பயப்படக்கூடாது. உள்ளூர் கிரிக்கெட்டை மையமாக வைத்து நான் தேர்வாளர்களை பற்றி பேச விரும்புகிறேன். இந்திய அணிக்கு சமீப காலங்களில் உயர்தர கிரிக்கெட்டை விளையாடிய தேர்வுக்குழுவினர் தேவை. அவர்கள் 5 – 6 அல்லது 7 – 8 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 2019இல் விராட் கோலி சொன்னதை இந்திய அணிக்காக.. பிசிசிஐ செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு.. அஸ்வின் பேட்டி

“ஏனெனில் கிரிக்கெட் உருமாறி புதிதாக பரிணமித்து வருகிறது. கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் வேகத்திற்கேற்ப தேர்வுள்குழுவினரின் மனநிலை இருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். எனவே 20 – 30 வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டை எப்படி விளையாடினோம் என்பதை முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் நமக்குத் தேவையில்லை. தற்போதுள்ள டி20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை புரிந்து நவீன வீரர்களின் ஸ்டைலை உணர்ந்து தேர்ந்தெடுப்பவர்களே இந்தியாவுக்கு தேவை” என்று கூறினார்.

Advertisement