- Advertisement -
ஐ.பி.எல்

நல்ல டிஸ்கஷன் தான் எல்லாத்துக்கும் காரணம்.. மும்பை அணியை வீழ்த்திய பிறகு – ரஹானே பேச்சு

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மும்பை அணியை வீழ்த்திய பிறகு : அஜின்க்யா ரஹானே பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கார்பின் போஷ் 32 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 26 ரன்களையும் குவித்தனர். பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி :

- Advertisement -

18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மணிஷ் பாண்டே 45 ரன்களையும், ரோவ்மன் பவல் 40 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது : நாங்கள் முதல் ஆறு போட்டியில் தோல்வியடைந்த பின்னர் அனைத்து வீரர்களிடம் வெளிப்படையான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.

அதில் இனிவரும் போட்டிகளில் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்றும் டி20 போட்டிகளில் இதுபோன்ற தோல்வியை சந்தித்தாலும் அதன்பிறகு எவ்வாறு மீண்டுவர வேண்டும் என்பது குறித்தும் பேசியிருந்தோம். அந்த வகையில் ஒரு நல்ல இடைவெளிக்கு பின்னர் மீண்டும் களமிறங்கிய நாங்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். தற்போது இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி மிக முக்கியமான ஒரு வெற்றியாகவும் மாறியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி ஒரு ஸ்பெஷல் டேலன்ட்.. கெயிலின் அந்த சாதனையை முறியடிப்பார்- கும்ப்ளே கருத்து

இதற்கு முழுக்க முழுக்க எங்களது நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்த சூழல் தான் காரணம் என்று நினைக்கிறேன். தற்போது வீரர்களிடையே நல்ல சூழல் இருக்கிறது. முதல் ஆறு போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்று வருகிறோம். இது ஒரு நல்ல மாற்றமாக அமைந்துள்ளது என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -