இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை பொருத்தவரை அனுபவ வீரரான சத்தீஷ்வர் புஜாரா கடந்த பல ஆண்டுகளாகவே மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு மூன்றாவது இடத்தில் சுப்மன் கில், கருண் நாயர், சாய் சுதர்சன் என பல்வேறு வீரர்கள் களமிறக்கி பரிசோதிக்கப்பட்டனர். ஆனாலும் இன்று வரை அந்த மூன்றாவது இடத்திற்கான தேடல் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.
3 ஆம் இடத்தில் அவர்தான் விளையாட வேண்டும் : அஜிங்க்யா ரஹானே விருப்பம்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்று வரும் தொடரிலும் முதல் போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு மூன்றாவது இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் மூன்றாம் இடத்திற்கான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் சுப்மன் கில்லுக்கு பதிலாக மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். அதனால் இந்த போட்டியில் சாய் சுதர்சன் மூன்றாம் இடத்தில் விளையாடுவாரா? அல்லது வாஷிங்டன் சுந்தர் மூன்றாம் இடத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது இடத்தில் எந்த வீரர் விளையாடினால் சரியாக இருக்கும் என்பது குறித்து முன்னாள் இந்திய வீரரான அஜிங்க்யா ரஹானே சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன் தான் மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டும்.
ஏனெனில் அவர் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் அதுமட்டும் இன்றி மூன்றாம் இடத்தில் அவரால் நிலைத்து நின்று விளையாட முடியும் என்று நினைக்கிறேன். வாஷிங்டன் சுந்தரும் ஒரு சிறப்பான வீரர்தான் ஆனாலும் அவர் என்னை பொறுத்தவரை ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர். அதனால் அவர் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் விளையாடினால் தான் சரியாக இருக்கும்.
இதையும் படிங்க : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியே ஆகனும் – சபா கரீம் கருத்து
ஏனெனில் பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கும், டாப் ஆர்டரில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே டாப் ஆர்டரில் முழுநேர பேட்ஸ்மேனான சாய் சுதர்சனும், பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்கலாம். அவரால் பின்வரிசையிலும் மிகச் சிறப்பாக ரன்களை குவிக்க முடியும் என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.



