ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடரில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் தேர்வான தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அதனால் இம்முறையும் ஆசியக் கோப்பையில் அவர் இந்தியாவின் வெற்றிக்கு வித்திடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை அக்சர் படேல் இந்திய அணியில் அண்டர்ரேட் வீரர் என்று முன்னாள் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளார்.
அண்டர்ரேட் வீரர்:
இது பற்றி ரகானே தமது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அக்சர் மிகவும் அண்டர்ரேட்டட் பிளேயர் என்று நான் கருதுகிறேன். கடந்த 2 – 3 வருடங்களில் அவர் மிகவும் முன்னேறிய கிரிக்கெட்டராக தோன்றுகிறார். வாய்ப்பு கிடைக்கும் போது பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் அணிக்காக அவர் நன்றாக விளையாடியுள்ளார். அவரால் புதிய பந்தில் பவர் பிளேவில் பவுலிங் செய்ய முடியும்”
“மிடில் ஓவர்களில் வழக்கம் போல பவுலிங் செய்யும் அவர் தேவைப்பட்டால் டெத் ஓவர்களிலும் பந்து வீசுவார். அக்சர் படேல் போன்ற வீரர் அணியில் இருக்கும் போது கேப்டனாக நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இங்கே அவருடைய ஃபீல்டிங் திறனையும் மறக்கக்கூடாது. இம்முறை ஆசியக் கோப்பை நடைபெறும் துபாயில் பிட்ச் பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது”
முக்கியமான பாண்டியா:
“எனவே அக்சர் அனுபவம் மற்றும் திறன் ஆகியவை நம்முடைய அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆசியக் கோப்பையை வெல்ல ஹர்திக் பாண்டியாவின் வேலையின் முக்கியமாக இருக்கும். கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ள அவர் 5, 6வது இடங்களில் பேட்ஸ்மேனாக சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தார் போல் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். அதே போல இம்முறையும் அவர் அசத்துவார் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க: 80 லட்சம்.. நன்றி மறவாத பாண்டியா பிரதர்ஸ்.. சொந்த தங்கைகளாக நினச்சு செய்த உதவிகள்.. பற்றி கோச் பேட்டி
“அணிக்காக பாண்டியா தன்னுடைய முழுமையான 4 ஓவர்களையும் வீசுவதை பார்க்க விரும்புகிறேன். அவர் முழுமையாக 4 ஓவர்களை வீசினால் அது நம்முடைய அணிக்கு மிகவும் நல்ல சமநிலையைக் கொடுக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.



