- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்பின் பிட்ச் அமைச்சுட்டா போதாது.. அவங்கள மாதிரி இந்தியாவுக்கும் 10 நாள் கேம்ப் போடுங்க.. ரஹானே விமர்சனம்

கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து தங்களது சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த நியூசிலாந்து தொடரில் இந்தியா சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் தோல்வியை சந்திப்பதற்கும் சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனாலும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து அவமானத் தோல்வியைச் சந்தித்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். ஆனால் அதில் இந்திய அணி நன்றாக விளையாடாததே தோல்விக்கு காரணமானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஸ்பின் பிட்ச் போதுமா:

இந்நிலையில் இந்தியாவில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சுழலுக்கு சாதகமானம் பிட்ச்சுகளை அமைப்பதில் தவறில்லை என்றும் முன்னாள் கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். இருப்பினும் அதில் வெற்றி பெற இந்திய அணியை சரியாக தயார்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதை செய்யாத இந்திய அணி வெறும் 3 நாட்களுக்கு முன் மைதானத்திற்கு சென்று சாதாரண பிட்ச்சில் பயிற்சி எடுப்பதாக ரஹானே விமர்சித்துள்ளார்.

மறுபுறம் வெளிநாட்டு அணிகள் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்தியாவில் பயிற்சி முகாம் அமைத்து சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் பயிற்சிகளை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதுவே கொல்கத்தாவில் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்ததாக தெரிவிக்கும் ரஹானே இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் ஏன் வெளிநாடுகளில் நன்றாக விளையாடுகிறோம்? ஏனெனில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நம்முடைய தயாராகும் முறைகள் நன்றாக இருக்கிறது”

- Advertisement -

தயாராக வேண்டாமா:

“அதனால் நாம் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு சாதகமான பிட்ச்சுகளில் நன்றாக விளையாடுகிறோம். ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாடுவதற்கு நாம் தயாராவதில்லை. அதனாலேயே நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கு ஸ்பின் பிட்ச்களில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக மாறி விடுகிறது. ஆம் நாம் நம்முடைய சொந்த மண் சாதகத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஸ்பின்னர்களை போட்டிக்குள் கொண்டு வர வேண்டும்”

இதையும் படிங்க: சீட்டிங் சாம்பியன் ஸ்மித் என்னை பேசலாமா? உப்பு காகிதம் இல்லாமையே இதை பண்ணலாம்.. பனேசர் பதிலடி

“அதே போல நம்முடைய பேட்ஸ்மேன்களையும் தயார்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் தொடரின் துவக்குவதற்கு முன்பாக 10 நாட்கள் முகாம் அமைக்க வேண்டும். எடுத்துகாட்டாக நியூசிலாந்து, இங்கிலாந்து தயாரான முறைகளைப் பாருங்கள். இந்திய தொடருக்கு முன் இங்கிலாந்து துபாயில் முகாமிட்டது. நியூசிலாந்து அணி இந்தியாவில் முகாமிட்டது. ஆனால் நாம் வெறும் 3 – 4 நாட்களுக்கு முன்பாக ஒன்று சேர்ந்து விட்டு நம்முடைய பேட்ஸ்மேன்கள் அசத்த வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?” எனக் கூறினார்.

- Advertisement -