தோனி மேஜிக் தொடருமா..! வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் ராயல்ஸ்..! சென்னையை பழி தீர்க்குமா ராஜஸ்தான் ..!

dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 43வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி இன்று மோதவுள்ளது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று தனது வெற்றியின் மூலம் சென்னை அணியை பழிதீர்க்க காத்துக்க கொண்டிருக்கிறது ராஜஸ்தான் அணி.

rajasthan

- Advertisement -

நடந்து முடிந்த 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறது. மேலும், இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர்களில் இந்த இரு அணிகளும் 18 போட்டிகளில் சந்தித்துள்ளது. அதில், சென்னை அணி 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் சென்னை அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. அந்த அணியின் வாட்சன் நல்ல பார்மில் விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் உடனான முதல் போட்டியில் அந்த அணியின் பந்துகளை தேரிக்காவிட்டார் வாட்சன் . மேலும்,சென்னை அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால், கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உத்வேகத்துடன் இருக்கும் ஜடேஜா, இங்கிலாந்து வீரர் மார்க் உடிற்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர் தீபக் சஹல் என்று அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

இந்த தொடரில் அஜிங்கிய ரஹானேவின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதனால் இன்று நடைபெறும் போட்டியில் அவர் பேட்டிங்கில் முதலில் களமிறங்குவதற்கு பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்குவரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. மேலும், இனி வரும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பு இந்த அணிக்கு சற்று கடினமாகத் தான் இருக்கிறது.

Advertisement