இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய கடைசி நாள் போட்டியில் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா தவறு செய்து விட்டார் :
ஏனெனில் போட்டியின் கடைசி நாளாக இன்று 90 ஓவர்கள் எஞ்சியிருப்பதால் இன்றைய போட்டியில் அவர்கள் வெற்றி பெறுவது உறுதி. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த ஒரு தவறுதான் இந்திய அணிக்கு தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : 107 ரன்கள் என்கிற சிறிய இலக்கினை வைத்து இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால் இந்த போட்டியில் நடைமுறையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஏனெனில் முதல் 10 ஓவர்களில் ஈரப்பதம் இருக்கும் அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பதனால் தொடர்ச்சியாக அவர்களை அழுத்தத்தில் வைப்பது கஷ்டம் எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முடியாது என்று அஜய் ஜடேஜா நேரடியாக சுட்டிக்காட்டி உள்ளார்.
பெங்களூரில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்தால் இந்திய அணி சிறப்பாக செயல்பட முடியும் என்று கேப்டன் ரோகித் சர்மா யோசித்தார். இதன் காரணமாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பிளேயிங் லெவனில் தேர்வு செய்தார்.
இதையும் படிங்க : குருவை மிஞ்சிய சிஷ்யன்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் சாதனை – விவரம் இதோ
அதுதான் இந்திய அணிக்கு தற்போது தவறாக முடிந்துள்ளது. ஏனெனில் நியூசிலாந்து அணியை பொறுத்த வரை மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். அவர்கள் இந்த திட்டத்தை சரியான நோக்கத்தில் கையில் எடுத்த போது ரோகித் சர்மா அதனை செய்ய தவறிவிட்டார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



