குருவை மிஞ்சிய சிஷ்யன்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் சாதனை – விவரம் இதோ

Dhoni-and-Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மூன்று வகையான இந்திய அணியிலும் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் முன்பை போன்று சிறப்பாக விளையாட முடியுமா? என்று கேள்வியும் அவர் மீது இருந்தது.

தோனியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட் :

ஆனால் காயத்திலிருந்து மிகச் சிறப்பான கம்பேக்கை கொடுத்து இருந்த ரிஷப் பண்ட் தற்போது மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவருக்கு பிடித்தமான டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் வழக்கம்போலவே அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரில் சதம் விளாசிய அவர் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தியுள்ளார்.

அதன்படி நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 20 ரன்கள் குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது 105 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரி மற்றும் ஐந்து சிக்சர் என 99 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் சாதனை ஒன்றியனையும் முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி தன்வசம் வைத்திருந்தார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் எந்த டீமுக்காக விளையாடப்போறீங்க? ரசிகரின் கேள்விக்கு ரோஹித் சர்மா – கொடுத்த ரியாக்ஷன்

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ரிஷப் பண்ட் அரை சதத்தை கடந்து 53 ரன்களில் விளையாடிய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ரன்கள் பூர்த்தி செய்தார். இந்த சாதனையை ரிஷப் பண்ட் 62 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டியலில் முதலிடத்தில் 69 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்திருந்த தோனியை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement