அவரு என்ன தப்பு பண்ணாரு. டெஸ்ட் அணியில் ஏன் அவரை சேக்கல – அஜய் ஜடேஜா கோபம்

ajay
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கான்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியில் கேப்டன் விராத் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மட்டுமின்றி மிடில் ஆர்டரில் விளையாடி வந்த விஹாரியை டெஸ்ட் அணியில் நீக்கியது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய போட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

அஷ்வினுடன் இணைந்த விஹாரி காயம் அடைந்த போதிலும் தனது விடா முயற்சியின் காரணமாக போட்டியை டிரா செய்து கொடுத்தார். இந்நிலையில் அவரது இந்த நீக்கம் மிகப் பெரிய கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான அஜய் ஜடேஜா விஹாரிக்கு ஆதரவாக தேர்வுக் குழுவினர் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விகாரி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து இதுவரை சிறப்பாக விளையாடி உள்ளார்.

Vihari

அவர் இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவரது ஆட்டம் அருமையாக இருந்தது. அவர் என்ன தவறு செய்தார் ? அவரை இந்திய அணியில் இருந்து நீக்கி தென்னாப்பிரிக்க தொடருக்காக இந்திய ஏ அணியுடன் எதற்கு அனுப்பி உள்ளீர்கள் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாட தகுதியற்ற வீரரா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 10 அணிகள். 60 நாட்கள். சென்னையில் முதல் போட்டி. 15 ஆவது ஐ.பி.எல் தொடர் – துவங்கும் தேதி அறிவிப்பு

மேலும் அவரை தேர்வு செய்யாதது தேர்வுக் குழுவினர் செய்த தவறு என்றும் அதுவே மக்களின் மனங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கூறியது போல நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விஹாரி சிறப்பான ஒரு வீரர் என்றும் அவருக்கு கட்டாயம் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement