
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ம் தேதி ஜெய்ப்பூரில் 47வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் நிர்ணயம் 210 ரன்கள் இலக்கை ஓவரில் எடுத்த ராஜஸ்தான் செய்த 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 200+ இலக்கை மிகவும் குறைந்த ஓவரில் எடுத்த அணியாகவும் ராஜஸ்தான் சாதனை படைத்தது.
அந்த வெற்றிக்கு 14 வயது மட்டுமே நிரம்பிய இளம் வீரர் வைபவ் சூரியவன்சி சதத்தை அடித்து 101 (38) ரன்கள் விளாசி பங்காற்றினார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதம் மற்றும் சதத்தை அடித்த வீரர் என்ற 2 உலக சாதனைகளை அவர் படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் வைபவ் படைத்தார்.
இபிஎல் தொடரில் மிகவும் இளம் வயதில் அரை சதம், சதத்தை அடித்து, ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்தார். அப்படிப்பட்ட அவருடைய ஆட்டத்தை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பாராட்டினர். ஆனால் சூரியவன்சி அதிர்ஷ்டத்தின் உதவியால் மட்டுமே சதத்தை அடித்ததாக குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார்.
இது பற்றி கில் போட்டியின் முடிவில் தெரிவித்தது பின்வருமாறு. “இது அவருடைய அதிர்ஷ்டமிக்க நாள். அவருடைய ஹிட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் தன்னுடைய அதிர்ஷ்டம் மிகுந்த நாளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்” என்று துச்சமாக கூறினார். ஆனால் அதைப் பார்த்த முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா 14 வயதில் உங்களுடைய கனவு என்னவாக இருந்தது? என்று சுப்மன் கில்லை சாடினார்.
மேலும் சூரியவன்சி திறமையை பயன்படுத்தி மட்டுமே அந்த சதத்தை அடித்ததாகவும் பாராட்டிய ஜடேஜா இது பற்றி ஜியோஸ்டார் சேனைலில் பேசியது பின்வருமாறு. “ஆனால் 14 வயது வீரர் தன் மீதே நம்பிக்கை வைத்துள்ளார். அந்த தன்னம்பிக்கையே அவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளது. அது தெரிந்தும் ஒரு வீரர் இது வெறும் அவருடைய அதிர்ஷ்டமான நாள் தொலைக்காட்சியில் என்று சொல்கிறார்”
இதையும் படிங்க: நல்லவேளை வருண் சக்ரவர்த்தி எஸ்கேப் ஆகிட்டாரு.. மோசமான சாதனையில் முதலிடத்திற்கு சென்ற – கரீம் ஜனத்
“கிரிக்கெட்டில் விளையாடிய நாம் அனைவரும் இது போன்ற வழியை கனவு கண்டிருப்போம். இது தான் நீங்கள் காண வேண்டிய கனவு. 14 – 15 வயதில் நாம் அனைவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டிருப்போம். ஆனால் இது தான் உண்மையில் நீங்கள் காண வேண்டிய கனவு. அந்த கனவில் இந்தப் பையன் இன்று நிஜமாக வாழ்ந்துள்ளார். அவருக்கு சக்தி இருக்கிறது. அவர் இங்கே 100 முறை சோதனை செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.