கேட்கிறனேன்னு தப்பா நினைத்தாலும் சரி – கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அஜய் ஜடேஜா நியாயமான சுளீர் கேள்வி

Ajay-Jadeja
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி இன்றுடன் நிறைவு பெறும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி 1 கொஞ்சமும் போராடாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Jos Buttler Rohit Sharma KL Rahul

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக வரலாற்றுத் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின் அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்ற இந்தியா நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறியது. ஆனால் அவரது தலைமையில் அழுத்தமான ஆசிய கோப்பையில் தோற்றது போல இந்த உலக கோப்பையிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளதால் உடைந்து போயுள்ள ரசிகர்கள் புதிய கேப்டனை நியமிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

சுளீர் கேள்வி:

ஏனென்றால் செமி ஃபைனலில் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு அவரது கேப்டன்ஷிப் மோசமாக இருந்தது. அதை விட புதிய கேப்டனாக பொறுப்பேற்றாலும் கடந்த ஒரு வருடத்தில் ஒரு சில முக்கிய தொடர்களை தவிர்த்து பெரும்பாலான தொடர்களில் ஓய்வெடுத்த ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பைக்கு பின் நடைபெறும் நியூஸிலாந்து தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளார். ஆனால் உலகக் கோப்பையை வெல்வதற்கு முதலில் ஒரு கேப்டன் நிலையாக அணியுடன் இணைந்து தொடர்ந்து விளையாட வேண்டும். அப்போது தான் தரமான வீரர்கள் யார் யார் என்பதை அருகிலிருந்தது கவனித்து தாமும் நல்ல ஃபார்முடன் விளையாட முடியும்.

Rohit Sharma IND

இருப்பினும் முக்கியமற்ற இருதரப்பு தொடர்களில் ஓய்வெடுத்து உலக கோப்பையில் ராஜாவை போல் களமிறங்கிய ரோகித் சர்மா கடந்த ஒரு வருடத்தில் எத்தனை தொடர்களில் தொடர்ந்து விளையாடினார் என்று சொல்ல முடியுமா? என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஒன்றை சொல்கிறேன். அது ரோகித் சர்மாவுக்கு வலியை கொடுக்கலாம். ஒரு கேப்டனாக ஒரு அணியை உருவாக்க நினைத்தால் முதலில் நீங்கள் அந்த அணியுடன் அந்த வருடம் முழுவதும் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இந்த வருடம் ரோகித் சர்மா எத்தனை தொடர்களில் விளையாடினார்? இதை நான் இப்போது சொல்லவில்லை முன்பிருந்தே சொல்லி வருகிறேன்”

- Advertisement -

“அடுத்ததாக நடைபெறும் நியூசிலாந்து தொடரில் கூட அவரும் பயிற்சியாளரும் பயணிக்கவில்லை. பொதுவாக ஒரு அணியில் ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இவர் தொடர்ச்சியாக விளையாடாத காரணத்தால் தற்போதைய அணியில் 7 தலைவர்கள் இருப்பது பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி என்னை மிகவும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. அப்போட்டில் நாம் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதே போல் பந்து வீச்சு மோசமாக இருந்தது. மேலும் விக்கெட் எடுக்க முடியாத அளவுக்கு எதிரணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கும் சிறிதல்ல”

Ajay

“அத்துடன் நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி அதை சமாளித்தவர்கள்” என்று கூறினார். முன்னதாக இந்த வருடம் ரோகித் சர்மா நிறைய தொடர்களில் ஓய்வெடுத்ததால் வரலாற்றிலேயே முதல் முறையாக கேஎல் ராகுல், ஷிகர் தவான், ரிசப் பண்ட், ஹர்திக் பாண்டியா என முதல் 7 மாதங்களில் 7 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவை வழி நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement