பந்துகளை அடித்து விளாசும் இவர் பொறுமையாக விளையாடியது ரொம்ப சூப்பர் – அஜய் ஜடேஜா பாராட்டு

ajay
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய விளையாடியது. அதன்படி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி விரைவில் ஆட்டமிழந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Ashwin

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விகாரி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோரது அபார பேட்டிங் இன் மூலம் இந்திய அணி தோற்றிருக்க வேண்டிய இந்த போட்டியை டிரா செய்தது. இந்த போட்டியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த ரோஹித் சிறப்பாக விளையாடி இந்த போட்டியில் ரன்களை குவித்தார்.

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மாவின் இந்த நிதானமான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் அஜய் ஜடேஜா புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் விளையாடுவதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனைப் போல அவர் விளையாடுவார். அவரது ஷாட் தேர்வு சிம்பிளாக இருக்கும். சிட்னி டெஸ்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் அவரது பொறுமையும் விடாமுயற்சியும் வேற லெவல்.

ashwin 1

அந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருந்தது என்று அவர்கள் நினைத்தனர் ஆனால் அவர்களுக்கு தண்ணி காண்பிப்பது போல் விளையாடியது. வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிதானத்தை கடைபிடிப்பது என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது என்று ரோகித் சர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்து அவர் பேசினார்.

Rohith

மேலும் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய துவக்க வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement