என்ன இருந்தாலும் அந்த விஷயத்தில் அக்சர் படேல் ஜடேஜாவுக்கு சமமாக வரமுடியாது – முன்னாள் வீரர் சரியான கருத்து

Axar Patel Ravindra Jadeja
- Advertisement -

டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அனைத்து இருதரப்பு டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக தரவரிசையில் முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதற்காக துவளாமல் சொந்த மண்ணில் உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது. முன்னதாக ஆசிய கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியது சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்து பைனலுக்கு கூட செல்ல முடியாத பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Ravindra-Jadeja

- Advertisement -

அதைவிட அலைச்சறுக்கு செய்யும் போது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட அவர் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2019க்குப்பின் பேட்டிங்கில் மிகப்பெரிய எழுச்சி கண்ட அவர் 3 வகையான துறையிலும் அசத்தி உலக அளவில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார். அதனால் உலக கோப்பையில் அவரது இடத்தில் சிறப்பாக செயல்படப்போவது யார் என ரசிகர்கள் கவலையடைந்த போது நான் இருக்கிறேன் என்ற வகையில் மற்றொரு சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் அசத்த தொடங்கியுள்ளார்.

நம்பிக்கையில் ரசிகர்கள்:
குறிப்பாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் ஆரம்பம் முதலே எஞ்சிய அனைத்து இந்திய பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய நிலையில் இவர் மட்டும் துல்லியமாகவும் கச்சிதமாகவும் பந்து வீசினார். அதிலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான சஹாலை விட அற்புதமாக பந்து வீசிய அவர் 8 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஆல்-டைம் சாதனையுடன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

Axar Patel Rohit Sharma

மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் ஒரு போட்டியில் இந்தியா தடுமாறியபோது கடைசி நேரத்தில் களமிறங்கி தனி ஒருவனாக அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த அவர் நல்ல பார்மில் இருப்பதால் நிச்சயம் ஜடேஜாவுக்கு மாற்று வீரராக உலக கோப்பையில் அசத்துவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் என்னதான் பேட்டிங் மற்றும் பௌலிங் துறையில் ஜடேஜாவுக்கு சமமாக செயல்பட்டாலும் பீல்டிங் துறையில் அக்சர் படேல் அவரை மிஞ்ச முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

- Advertisement -

பீல்டிங் துறை:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அக்சர் பட்டேல் தன்னுடைய தரத்தை காட்டிய விதத்தில் ஜடேஜாவுக்கு மாற்றாக செயல்பட முடியும் என்பது தெரிகிறது. அந்த வாய்ப்பை அவர் இருகரம் கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ரவீந்திர ஜடேஜாவை மிஸ் செய்கிறோம். இருப்பினும் பந்துவீச்சு கோணத்தில் அவரை நாம் யாரும் மிஸ் செய்ய மாட்டோம்”

Ajay

“அந்த வகையில் பந்து வீச்சில் அவரைவிட சற்று அசத்தும் அக்சர் பட்டேல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். ஆனால் பில்டிங் துறையில் மட்டும் அவரால் ஜடேஜாவை ஈடு செய்ய முடியாது. மேலும் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் தற்போது நிலவும் கேள்விகளுக்கான பதிலை அணி நிர்வாகம் கொடுக்க வேண்டும். இருப்பினும் இந்தத் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் வளைவு தன்மை மற்றும் நேர்மறையான அணுகுமுறை ஆகியவை சிறப்பாக வந்துள்ளது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல பேட்டிங், பந்து வீச்சில் அசத்தினாலும் பீல்டிங் துறையில் ஜடேஜாவை மிஞ்சுவது அக்சர் படேல் மட்டுமல்ல உலக அளவில் நிறைய வீரர்களுக்கு சவாலான காரியமகும். ஏனெனில் பெரும்பாலும் பவுண்டரி எல்லையின் அருகில் நின்று கேட்ச்களை கச்சிதமாக பிடிக்கும் அவர் உள் வட்டத்திற்குள் நின்றால் பேட்ஸ்மேன்கள் யோசிக்கும் அளவுக்கு துல்லியமாக ஸ்டம்பை நோக்கி எறிந்து ரன் அவுட் செய்வதில் வல்லவர். மறுபுறம் மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கூட 61 ரன்களை விளாசி தோல்வியை பரிசளித்த கேமரூன் கிரீன் 41 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்ட அக்சர் பட்டேல் ஃபீல்டிங் துறையில் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement