அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை வீரர் – அதிரடி ஓய்வு

Mendis-2
- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டீஸ் (வயது 34) இவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான மென்டிஸ் அறிமுகமான சில மாதங்களிலேயே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் உலகின் பல சிறந்த பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார்.

mendis

- Advertisement -

மேலும் அவர் அறிமுகமான அதே 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டம் காண வைத்தார். மேலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி அவர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 19 போட்டிகளில் அவர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடைசி நான்கு ஆண்டுகளாக அவர் இலங்கை அணியில் இடம் பிடிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக ஆடிய அவர் அதன் பிறகு இலங்கை அணி அவரை அணியில் சேர்க்க மறுத்து வந்தது. மேலும் அவர் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஓய்வு முடிவினை எடுத்துள்ளார்.

mendis 1

19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 70 விக்கெட்டுகளையும், 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது ஓய்வு அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement