வெளியே தான் தோனி கேப்டன் கூல் ஆனா அணிக்குள் விராட் கோலி, என்னை திட்டுவாரு – பின்னணியை பகிர்ந்த இஷாந்த் சர்மா

Ishanth
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தான விக்கெட் கீப்பர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். மேலும் டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்து வரலாற்றின் மகத்தான கேப்டனாக போற்றப்படும் அவர் இன்றைய அணியில் விளையாடும் விராட் கோலி போன்ற நிறைய வீரர்கள் வளர்வதற்கு அப்போதே போதிய ஆதரவு கொடுத்து முக்கிய காரணமாக இருந்து வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த பெருமைக்குரியவர்.

Dhoni

- Advertisement -

அந்த வகையில் பல பரிணாமங்களை கொண்டிருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் தோற்றாலும் ஃபீல்டர்கள் கேட்ச் விட்டாலும் அல்லது ஃபைனலில் கோப்பை வென்றாலும் ஒரே மாதிரியான ரியாக்சன்களை கொடுக்கும் அவர் கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும் தாமும் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் 2019 ஐபிஎல் தொடரில் நடுவர்களுடன் களத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற சில தருணங்களில் தோனி கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

உள்ளுக்குள் கோபம்:
இந்நிலையில் வெளியில் கூலாக இருந்தாலும் அணிக்குள் அவ்வப்போது சரியாக விளையாடுவதற்காக தாம் மற்றும் விராட் கோலி போன்ற அனைத்து வீரர்களையும் தோனி திட்டுவார் என இசாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் அவருடைய மனதிற்குள் ஏதோ ஒன்று ஆழமான சிந்தனை ஓடுகிறது என அர்த்தமாகும். அந்த குறிப்பிட்ட சமயத்தில் நீங்கள் ஏதாவது கேட்டால் அவர் கோபப்பட்டு விடுவார். அதே சமயம் அவர் அதிகப்படியாக கோபப்பட்டு நான் பார்த்ததில்லை”

Dhoni-kohli

“களத்தில் சில சமயங்களில் அவர் என் மீது கோபப்பட்டுள்ளார். ஒருமுறை நான் வீசிய பந்து அவருடைய கைகளை சரியாக சென்றடையாததால் “என்னுடைய கையில் அடி” என்று கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் அவர் எப்போதும் கூலாக இருக்க மாட்டார். சில நேரங்களில் வீரர்களை விளையாட்டாக திட்டுவார். இருப்பினும் அவர் என்னுடைய தம்பியாக நினைத்து பேசுவார். சொல்லப்போனால் ஏன் நீங்கள் என்னிடம் இவ்வாறு விளையாடுகிறீர்கள் என்று அவரிடம் நான் கேட்டுள்ளேன்”

- Advertisement -

“அதற்கு எனக்கு பிடித்தவர்களிடம் மட்டுமே நான் கலாய்த்து விளையாடுவேன் என்று அவர் கூறினார். மேலும் அவர் பவுலிங் மீட்டிங் நடந்தால் அதற்கு வர மாட்டார். ஏனெனில் அதை தன்னுடைய வேலையாக கருதாத அவர் களத்தில் அந்த நிமிடத்தில் இருக்கும் சூழ்நிலைக்கு எப்போதுமே யாராலும் முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது என்பதை நம்பினார். எனவே நீங்கள் எப்போதும் திறந்த மனதுடன் செல்ல வேண்டும். ஒருமுறை நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது ஷிகர் தவான் அறிமுகமானார்”

“அப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் அவர் காயத்தை சந்தித்து களமிறங்கவில்லை என்றாலும் நாங்கள் தடுமாற்றத்திற்கு பின் வென்றோம். அந்தப் போட்டியில் முக்கிய நேரத்தில் விராட் கோலி தவறான ஷாட் அடித்து அவுட்டானார். அதனால் போட்டி முடிந்த பின் “ஏற்கனவே நம்மிடம் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருக்கிறார் என்று தெரிந்தும் ஏன் நீ அந்த சுமாரான ஷாட்டை அடித்தாய்” என்று அவர் விராட் கோலியிடம் சொன்னார். அந்த சமயத்தில் அவர் கோபமடையாவிட்டாலும் விராட் கோலி புரிந்துகொள்ளும் வகையில் ஆழமாக சொன்னார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:TNPL 2023 : மதுரை மானத்தை காத்த வாஷிங்டன் சுந்தர், மேஜிக் நிகழ்த்திய அஜய் – கையில் வைத்திருந்த வெற்றியை சேப்பாக் விட்டது எப்படி?

மேலும் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் நிகழ்ந்த தருணத்தைப் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவின் பந்து வீச்சில் போப்பாரா இறங்கி வந்து அடித்ததால் நான் மிட் ஆன் திசையில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் திடீரென அவர் மிட் விக்கெட் திசையில் அடித்ததால் நான் சென்று பந்தை எடுப்பதற்குள் 2 ரன்கள் எடுத்து விட்டார். அப்போது தோனி எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் தம்முடைய குழந்தைகளை திட்டும் அப்பாவை போல அவருடைய கண் அசைவுகளே அனைத்தையும் புரிந்து கொள்ள போதுமானதாக இருந்தது. அதன் பின் உங்களால் முடியவில்லை என்றால் அங்கே ஃபீல்டிங் செய்யாதீர்கள் என்று தோனி கூறியதால் நான் வேறு பக்கம் சென்றேன்” என கூறினார்.

Advertisement