2024 டி20 உ.கோ ஃபைனல் தோல்விக்கு இந்தியாவை.. தெ.ஆ பழி வாங்குமா? கேப்டன் மார்க்ரம் பேட்டி

Aiden Markram
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

மறுபுறம் தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கியும் கடைசி 4 ஓவர்களில் இந்தியாவின் அசத்தலான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தற்போதைய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் விளையாடவில்லை. அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சில முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சூரியகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

பழி வாங்குமா:

எனவே உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு இத்தொடரில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இது பற்றி தென்னாபிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரமிடம் செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் இந்த சாதாரண தொடரை தாங்கள் அவ்வாறு எதுவும் கருத போகவில்லை என்று மார்க்கம் கூறியுள்ளார்.

இது பற்றி தொடர் துவங்குவதற்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் அதே நாடுகள் இத்தொடரில் விளையாடுகின்றன என்று நினைக்கிறேன். ஆனால் தனிப்பட்ட விஷயங்கள் இரு அணிகளுக்கு மாறியுள்ளன. எப்போதும் நீங்கள் இந்தியாவுக்கு எதிராக அதுவும் சொந்த மண்ணில் விளையாடுவது ஸ்பெஷலான விஷயம்”

- Advertisement -

சவாலான தொடர்:

“இது போன்ற தொடரை நாங்கள் எப்போதும் எதிர்பார்த்து இருக்கிறோம். இது உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் தொடராக இருக்கும் அல்லது அப்படி இருக்கும் என்று நாங்கள் எதையும் கருதவில்லை. இருப்பினும் விளம்பரங்கள் சம்பந்தமாக அது போன்ற பேச்சுக்கள் காணப்படுகின்றன. அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ முதல் டி20 நடைபெறும்.. ராசியான டர்பன் மைதானம் எப்படி? புள்ளிவரம் பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய அணியை போலவே தென் ஆப்பிரிக்க அணிகளும் இத்தொடரில் ரபாடா, டீ காக், சம்சி, நோர்ட்ஜெ உள்ளிட்ட முக்கிய பல்வேறு காரணங்களுக்காக விளையாடவில்லை. எனவே இந்தத் தொடர் ரசிகர்களுக்கு சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என்று சொல்லலாம். இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 8ஆம் தேதி தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement