தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு பின் இரு அணிகள் மோதும் இந்தத் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் உலகக்கோப்பை தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து சொந்த மண்ணில் இத்தொடரை வெல்ல தென்னாப்பிரிக்கா தயாராகியுள்ளது.
மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்து இத்தொடரில் வெல்ல இந்திய அணியும் போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 8ஆம் தேதி தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்க உள்ளது.
கிங்ஸ்மீட் மைதானம்:
1923 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இம்மைதானத்தில் 2007 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இம்மைதானத்தில் வரலாற்றில் மொத்தம் 18 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 11 போட்டிகளில் விளையாடிய தென்னாபிரிக்கா 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இங்கு 4 போட்டிகளில் விளையாடிய இந்தியா 4 வெற்றிகளை பெற்றுள்ளது.
குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கே தான் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையை படைத்தார். அந்த வகையில் இந்த மைதானம் இந்தியாவுக்கு ராசியாகவே இருந்து வருகிறது. ஒட்டுமொத்த வரலாற்றில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் 27 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 15 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா 11 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. மற்ற போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளில் டர்பன் நகரில் 10 – 20% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
கிங்ஸ்மீது பிட்ச் வரலாற்றில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்துக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் பவுன்ஸ் பயன்படுத்தி சவாலை கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கலாம். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசினால் சவாலை கொடுக்கக்கூடும்.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் 2 சாதனைகளை படைக்க காத்திருக்கும் – சூரியகுமார் யாதவ்
ஆனால் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 136. இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 முறையும் சேசிங் செய்த அணிகள் 8 முறையும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.



