இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட் ஆகி வினோதமான சாதனைக்கு சொந்தக்காரான தெ.ஆ வீரர் – விவரம் இதோ

Markram-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு முதல் இன்னிங்சை முடித்தது.

Markram 1

அதன் பின்னர் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய இன்று காலை இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் வழங்கியது. அதன்படி நான்காவது நாள் தேநீர் இடைவேளை வரை தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்து எடுத்து தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்னும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியுடன் 154 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரர் மார்க்ராம் இரண்டாவது இன்னிங்சிலும் டக் அவுட்டானார். ஏற்கனவே அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.

Markram 1

எனவே டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக சாதனையாக கருதப்படும் இரண்டு இன்னிங்சிலும் டக்அவுட் ஆகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஏற்கனவே தென்னாபிரிக்கா சார்பாக கிப்ஸ் இரு முறையும், கேரி கிறிஸ்டன் ஒருமுறையும் டெஸ்ட் போட்டிகளின் இரு அணிகளும் டக் அவுட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது நான்காவதாக மார்க்ராம் இணைந்துள்ளார்

Advertisement