பாகிஸ்தான் அணி இப்படி சீரழிய பாபர் அசாம் செய்த இந்த தவறு தான் காரணம் – முன்னாள் பாக் வீரர் குற்றச்சாட்டு

Shehzad
- Advertisement -

நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

பாகிஸ்தான் அணி சீரழிய பாபர் அசாம் தான் காரணம் :

மேலும் எதிர்வரும் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கூட அது பிரயோஜனம் இல்லை என்பதனால் இனிவரும் பாகிஸ்தான் அணியின் போட்டிகளை காண ரசிகர்கள் மைதானத்திற்கும் வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கண்கூடாக தெரிந்து வருகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கத்துக்குட்டி அணி போல் விளையாடி இந்த தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அகமது செஷாத் பாபர் அசாம் செய்த தவறுதான் பாகிஸ்தான் அணி இப்படி சீரழிந்து கிடக்க காரணம் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாபர் அசாமின் நிலைமையை பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. தனது கரியரின் ஆரம்பத்தில் பல்வேறு சாதனைகளை படைப்பார் என்று பேசப்பட்ட அவர் இன்று மோசமான பேட்டிங் ஃபார்ம்க்கு சென்றுள்ளார்.

- Advertisement -

ஒரு அணியில் சிறப்பாக விளையாடும் வீரரை கேப்டனாக மாற்றுவது தவறு. பாபர் அசாம் கேப்டனான பிறகு அவர் தன்னுடைய நண்பர்களை மட்டுமே அணியில் சேர்த்து அரவணைத்துக் கொண்டார். திறமையான வீரர்களுக்கு மதிப்பளிக்காமல் தனக்கு நெருக்கமான, தனக்கு நண்பர்களாக இருக்கும் வீரர்களையே அணியில் தேர்ந்தெடுத்தார். அப்படி அவர் செய்த தேர்வு தான் பாகிஸ்தான் அணியை மோசமாக்கி விட்டது.

இதையும் படிங்க : கஷ்டமான காலத்தில் நண்பனாக விராட் கோலிக்கு அனுப்பிய மெசேஜ் என்ன? 2022 பின்னணி குறித்து தோனி பதில்

இப்படி தனிப்பட்ட ஒருவரின் சாதகத்திற்காக அணியை மாற்றினால் ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் பாதித்துவிடும். இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் திறமையான வீரர்களை பாகிஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தால் தான் பாகிஸ்தான் அணியை காப்பாற்ற முடியும் என அகமது செஷாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement