நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் அத்தொடரின் முதல் போட்டியிலேயே 46க்கு ஆல் அவுட்டான இந்தியா போராடியும் வெற்றி காண முடியவில்லை. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது.
அதே போல இரண்டாவது போட்டியிலும் 156க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த ஊரில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.
பேப்பர் புலிகள்:
இந்நிலையில் 46க்கு ஆல் அவுட்டான பின் மீண்டும் வந்து இந்தியா வெல்லும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்ததாக பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத் தெரிவித்துள்ளார். ஆனால் தரமான வலுவான வீரர்கள் இருந்தும் அதை செய்யாத இந்திய அணியினர் பேப்பரில் மட்டுமே புலியாகவும் களத்தில் நொறுங்கிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கிண்டலடித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பேப்பரில் புலியாக இருப்பவர்கள் சொந்த மண்ணில் நொறுக்கியுள்ளனர். 46க்கு ஆல் அவுட்டான பின் அனைவருக்கும் மோசமான நாள் இருக்கும் என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அதை நாம் ஏற்றுக் கொண்டோம். அது நியாயமானது. ஆனால் இந்த போட்டியிலும் நீங்கள் விளையாடிய விதம் மெத்தனமாகி விட்டீர்கள் போல் இருந்தது. தேவையற்ற பேச்சில் நம்பிக்கை இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்”
இந்தியாவுக்கு பின்னடைவு:
“ஆனால் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் அந்த உணர்வு தெரியவில்லை. அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியினர் பள்ளி சிறுவர்கள் விளையாடியதைப் போல் விளையாடினர்” என்று கூறினார். அப்படி எதிரணியினர் கிண்டலடிக்கும் அளவுக்கு சொதப்பிய இந்திய அணியினர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்த 6இல் 4 வெற்றிகளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்டில் பும்ராவை விளையாட வைக்காதீங்க.. அதிரடியான கருத்தை கூறிய – தினேஷ் கார்த்திக்
குறிப்பாக மும்பையில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பின்னர் சவாலான ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதில் 3 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்ற வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது குறிப்பிட்டது.



