Mayank Agarwal : நான் இறங்கும்போது ராகுல் என்னிடம் இதையே கூறினார் – மாயங்க் அகர்வால்

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும்

Mayank-Agarwal
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Bhuvi

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது.

warnerfier

பிறகு 151 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பஞ்சாப் அணி சார்பாக ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 71 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும், மாயங்க் அகர்வால் 55 ரன்களை அடித்தார்.

- Advertisement -

Mayank-Agarwal

போட்டி முடிந்து பேசிய பஞ்சாப் அணியின் வீரர் மாயங்க் அகர்வால் கூறியதாவது : நான் பேட்டிங் செய்ய வந்தபோது 50-60 ரன்கள் வரை நாம் பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று ராகுல் என்னிடம் கூறினார். ஆனால், நான் அணிக்காக விரைவாக பவுண்டரிகளை அடிக்கவே எண்ணினேன்.

rahul

நபி கடைசி ஓவர் வீசும் போது எனக்கு கடினமாக இருந்தது. ஆனால், ராகுல் போட்டியை ரசித்து விளையாடிக்கொண்டிருந்தார். அதனால் வெற்றி பெற்று தருவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அதற்கேற்றாற்போல் ராகுல் கடைசி வரை இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் என்றது அகர்வால் கூறினார்.

Advertisement