IPL 2022 : இம்முறை இவருடன் நான் சேர்ந்து விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி – மாயங்க் அகர்வால் ஹேப்பி

Agarwal
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக 14 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் இந்த தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ஆம் தேதி துவங்கி மே 29 வரை நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான 70 போட்டிகளும் 3 மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடரானது நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருதினை அளிக்கும் என்று நம்பலாம்.

ipl

- Advertisement -

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் 55 போட்டிகள் மும்பையிலும், 15 போட்டிகள் புனேவிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமும் சென்ற மாதம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தின் முடிவில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து தற்போது தங்களது அணிகளை தயார் செய்து வருகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்து அணிகளும் பயிற்சியை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் தங்கள் அணி குறித்தும் தாங்கள் விளையாட இருக்கும் திட்டம் குறித்தும் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மாயங்க் அகர்வால் முதல்முறையாக கேப்டனாக விளையாட இருப்பது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான அகர்வால் இதுவரை 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2131 ரன்களை குவித்துள்ளார்.

agarwal

கடந்த ஆண்டு மட்டும் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 441 ரன்கள் குவித்தது மட்டுமின்றி ஒரு சதமும் அடித்து அசத்தியிருந்தார். இப்படி இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் இவரை 12 கோடி கொடுத்து இம்முறை பஞ்சாப் அணி தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கி உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து அவர் பேசுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் நான் கேப்டனாக செயல்பட இருப்பது மகிழ்ச்சி. அணி நிர்வாகம் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக நான் விளையாட இருக்கிறேன்.

- Advertisement -

இம்முறை இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் உடன் இணைந்து நான் பஞ்சாப் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்குவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அவருடன் விளையாட இருப்பதை நினைத்தால் இப்போதே மகிழ்ச்சியாக உள்ளது. அதே போன்று மற்றொரு இளம் வீரரான ராஜ் அங்கத் பாவாவுடன் விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவர்கள் இருவர் மட்டும் இன்றி பஞ்சாப் அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க : தோனியை விடுங்க. இம்முறை சி.எஸ்.கே அணியில் இவங்க 2 பேரு தான் அசத்தப்போறாங்க – பிராட் ஹாக் கணிப்பு

ஒரு அணியாக இணைந்து நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று மாயங்க் அகர்வால் கூறியுள்ளார். குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் பணியானது சென்னை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே தலா இரண்டு போட்டிகளில் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement