தோனியை விடுங்க. இம்முறை சி.எஸ்.கே அணியில் இவங்க 2 பேரு தான் அசத்தப்போறாங்க – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்த தொடரை இந்தியாவிலேயே நடத்த தேவையான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளின் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் இந்தியாவில் உள்ள மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ipl

- Advertisement -

இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின் வரும் மே 29ஆம் தேதி பைனலுடன் நிறைவு பெறுகிறது. இதில் 70 லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களிலும் 4 பிளே ஆப் போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த வருடம் 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக அனைத்து அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் மோத உள்ளன. இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களில் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது, எத்தனை முறை பைனல்களில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் அந்தந்த அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

csk 1

அந்த வகையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. மேலும் வரும் மார்ச் 26இல் துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் எம்எஸ் தோனி உட்பட தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் அந்த அணி நிர்வாகம் ஏலத்தின் வாயிலாக வாங்கியுள்ளது.

- Advertisement -

டாடி ஆர்மி:
பொதுவாகவே 30 வயதை கடந்த அனுபவம் வீரர்களை வாங்கும் ஒரு அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் ஒருசில இளம் வீரர்களை தவிர்த்து அனுபவம் வாய்ந்த வீரர்களையே ஏலத்தில் வாங்கியது. இருப்பினும் சுரேஷ் ரெய்னா, பப் டு பிளேஸிஸ் போன்ற காலம்காலமாக விளையாடி வந்த முக்கிய வீரர்களை அந்த அணி நிர்வாகம் வாங்காதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதை அடுத்து ருதுராஜ் கைக்வாட் போன்ற ஒருசில இளம் வீரர்களுடன் ராபின் உத்தப்பா, ப்ராவோ போன்ற பல மூத்த வீரர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை தக்க வைக்க களமிறங்கவுள்ளது.

csk

இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் 2 மூத்த வீரர்கள் சென்னை அணிக்கு கருப்பு குதிரைகளாக செயல்படுவார்கள் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் துருப்பு சீட்டாக செயல்படுவார்கள். அதன் காரணமாக லோயர் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

- Advertisement -

மேலும் டு பிளேஸிஸ் இல்லாத நிலையில் அவரின் ஓப்பனிங் பேட்டிங் இடத்தில் விளையாட டேவோன் கான்வேயை நான் தேர்வு செய்வேன். நடைபெற்று முடிந்த ஏலத்தில் சமமாக இருக்கக்கூடிய வீரர்களை சென்னை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அத்துடன் இந்த முறை நிறைய இளம் வீரர்களை வாங்கி உள்ளதால் அவர்கள் ருதுராஜ் கைக்வாட் செயல்பட்டதை போல வருங்காலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்” என கூறினார்.

Uthappa-2

வயதாகிவிட்டதாக நினைக்க வேண்டாம்:
அவர் கூறும் இந்த 2 வீரர்களும் இந்தியாவிற்காக விளையாடி பல வருடங்கள் ஆகிவிட்டது. சொல்லப்போனால் கடந்த 2018க்கு பின் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை இழந்த இவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டும் அவ்வப்போது விளையாடி வருகிறார்கள். இதில் ஹைதராபாத் நகரை சேர்ந்த அம்பத்தி ராயுடு இந்தியாவிற்காக வாய்ப்பை இழந்தாலும் சென்னை அணிக்காக கடந்த 2018 முதல் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அவரைபோல கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய ராபின் உத்தப்பா அதன்பின் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். குறிப்பாக சென்னை அணிக்கு கடந்த சீசனில் முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் பைனல் உட்பட பிளே ஆப் சுற்றில் அசத்தி 4-வது முறையாக சென்னை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க : புஜாராவின் 3 ஆவது இடத்திற்கு சரியான மாற்றுவீரர் இவர்தான் – முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கருத்து

எனவே இந்த 2 திறமை வாய்ந்த வீரர்களும் 35 வயதை கடந்து விட்டாலும் கூட வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு துருப்புச் சீட்டாக செயல்படுவார்கள் என பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement