நூலிழையில் சச்சினின் சாதனையை தவறவிட்ட அகர்வால் – விவரம் இதோ

sachin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து இருந்தது.

Agarwal 1

- Advertisement -

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அணியில் ரஹானே 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அகர்வால் சிறப்பாக விளையாடி தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டை சதத்தை நிறைவு செய்து 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி தற்போது 343 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் அகர்வால் 243 ரன்களை அடித்தும் சச்சினின் சாதனையை நூலிழையில் அவர் தவறவிட்டார். அந்த சாதனையை யாதெனில் இதுவரை இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை டாக்காவில் நடந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 248(நாட்அவுட்) ரன்கள் மூலம் வைத்துள்ளார.

Agarwal

2004 ஆம் ஆண்டு சச்சின் அந்த சாதனையை நிகழ்த்தினார். அதன்பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் மயங்க் அகர்வாலின் இந்த 243 ரன்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement