என்னுடைய மனநிலையும், இவரின் ஆலோசனையும் என்னை சிறப்பாக விளையாட வைத்தது – அகர்வால் பேட்டி

Agarwal
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்துள்ளது.

Agarwal 1

- Advertisement -

இதனால் தற்போது இந்தியா 343 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் ரஹானே ஜடேஜா மற்றும் புஜாரா ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் வீரர் அகர்வால் கூறியதாவது : 2016ஆம் ஆண்டு வரை எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் என்னுடைய மனநிலையை மாற்றி தோல்வி குறித்த என்னுடைய நினைப்பை கைவிட்டேன் அதன் பிறகு அதிக தாகம் கொண்டு இந்திய அணியில் விளையாடிய வருகிறேன். டெஸ்ட் அணியில் இடம் பெற்ற நாளிலிருந்து நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். இதன் மூலம் என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது. மேலும் முதல் போட்டியில் மெல்போர்னில் விளையாடியது சிறப்பான தருணம். அந்த தொடரை வெல்ல எனது பேட்டிங் உதவியாக இருந்தது பெரும் மகிழ்ச்சி அளித்தது. அந்த உணர்வே தான் எனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது.

Rahane

மேலும் அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் விளையாடி வருகிறேன். ரகானே மூத்த வீரர் அவர் எனக்கு களத்தில் கொடுத்த ஆலோசனைகள் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது. மேலும் நேற்றைய போட்டியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று நிதானமாக ஆட முடிவு செய்தோம். ஆனால் ஒரேடியாக தடுப்பாட்டம் ஆட கூடாது என்பதால் நல்ல வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம் என்று அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement