9 போட்டிகளில் மட்டுமே விளையாடி சாதனை படைத்த அகர்வால் – விவரம் இதோ

Agarwal-2
- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிவுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Agarwal

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 928 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய துவக்க வீரரான அகர்வால் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சிறந்த இடத்தை தற்போது பிடித்துள்ளார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 700 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

agarwal 3

மேலும் இந்த புள்ளி பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான 4 பேர் முதல் 10 இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி விராட்கோலி (728) இரண்டாவது இடத்திலும், அகர்வால் (700) பத்தாவது இடத்திலும் புஜாரா (791 புள்ளிகளுடன்) நான்காவது இடத்திலும் ரகானே (759 புள்ளிகளுடன்) 5-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement