ஐ.பி.எல் வரலாற்றில் ரெய்னா மற்றும் கெயிலுடன் சேர்ந்து தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்த அகர்வால் – விவரம் இதோ

agarwal 1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியானது நேற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய கே எல் ராகுல், அப்பன்டிக்ஸ் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போட்டியில் டாஸ் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

dcvspbks

இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ராப் சிம்ரன், ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களத்திற்குள் வந்த அதிரடி பேட்ஸ்மேனான கிரிஸ் கெயிலும் ஆறாவது ஓவரில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த மயங் அகர்வால் 58 பந்துகளை எதிர்கொண்டு 99 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகா களத்தை விட்டு வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பின்பு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மட்டுமல்லாமல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கும் சென்றுள்ளது.

agarwal 1

இந்தப் போட்டியில் 99 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக வெளியேறிய மயங்க் அகர்வால் ஐபிஎல் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில், ஒரு போட்டியில் 99 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக ஒரு வீரர் வெளியேறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் வீரரான கிறிஸ் கெய்லும் 99 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக வெளியேறி இருந்தனர்.

agarwal

இப்போது மயங்க் அகர்வாலும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், தனி ஒருவனாக நின்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 99 ரன்கள் அடித்த மயங்க் அகர்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement