- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் டீமுக்கு அவர் வேணும் அடம்பிடித்த கம்பீர்.. விடாப்பிடியாக மறுத்த அகார்கர் – நடந்தது என்ன?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) அல்லது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும் என்ற ஒரு அழுத்தமான சூழ்நிலையிலும் இருந்தது.

கம்பீரின் வேண்டுகோளை நிராகரித்த அகார்கர் :

ஆனால் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியை தவிர்த்து நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று இந்திய அணி இந்த தொடரையாவது சமன் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த ஆஸ்திரேலியா தொடரில் முதல் போட்டியை தவிர்த்து மற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பெருமளவு தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் புஜாராவை அணியில் சேர்க்க பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாகவும் ஆனால் அதனை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மறுத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்த ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்கான வீரர்களின் தேர்வின்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கட்டாயம் இந்து தொடருக்கு புஜாரா வேண்டும் என்றும் அவரது அனுபவம் நிச்சயம் ஆஸ்திரேலிய மண்ணில் நமக்கு கை கொடுக்கும் என்று மீண்டும் அவரை டெஸ்ட் அணியில் எடுக்க தேர்வுக்குழுவினரிடம் தனது கோரிக்கையை முன் வைத்தாராம்.

- Advertisement -

ஆனால் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தான் இனி புஜாராவை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்றும் அதை தவிர்த்து உங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று புஜாராவை இறுதிவரை சேர்க்க முடியாது என்று மறுத்து மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு – விவரம் இதோ

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மோசமான பார்மை வெளிப்படுத்தி வருவதும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதன்காரணமாக இந்த ஆஸ்திரேலிய தொடர் முடிந்து சில அதிரடியான நடவடிக்கைகளும் இந்திய அணியில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -