அகார்க்கரை அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய மீடியா. அவரை இந்த மோசமான லிஸ்ட் லையா சேப்பீங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

Agarkar-2
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போட்ஸ் மீடியா நிறுவனம் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான டெய்ல் எண்டர்களின் அணியை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டில் முடங்கி உள்ளது. கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

agarkar 3

- Advertisement -

கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் சமூகவலைதளத்தில் உரையாடிய பொழுது போக்கி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பாக்ஸ் ஸ்போட்ஸ் மீடியா நிறுவனம் கிரிக்கெட் வரலாற்றின் மிக மோசமான டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் அணியை தேர்வு செய்துள்ளது.

டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் என்றால் இறுதி வரிசையில் இறங்கும் பேட்டிங் தெரியாத பந்துவீச்சாளர்களே டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள். இப்படி மோசமாக பேட்டிங் செய்யும் 10 டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் பட்டியலை பிரபல ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நன்றாக பேட்டிங் செய்யும் திறனுடைய அஜித் அகார்கர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

agarkar 1

இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அகார்கர் பின்வரிசையில் இறங்கினாலும் ஓரளவு பேட்டிங் செய்யும் திறனுடையவர். அவரைவிட மோசமாக பேட்டிங் செய்யும் பவுலர்கள் உள்ள நிலையில் அவரை தேர்ந்தெடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிராக அவர் 8 முறை டக் ஆகியிருப்பதால் அவரை சேர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்திய வீரர்கள் இருவரை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் இந்தியாவின் அஜித் அகர்கர் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா ஓரளவிற்குத் தான் பேட்டிங் ஆடுவார். ஆனால் அஜித் அகர்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியுள்ளார். இந்தியாவிற்காக அவர் 26 டெஸ்ட் போட்டியில் 576 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ரன் 95 ஆகும்.

agarkar

196 ஒருநாள் போட்டிகளில் 1269 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது ஒருநாள் போட்டிகளில் வெறும் 21 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இப்படி இருக்கையில் இவரை எப்படி இந்த மோசமான அணியில் தேர்வு செய்தீர்கள் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அந்த மீடியோவை கரித்துக் கொண்டு வருகின்றனர். அந்த மீடியா நிறுவனம் தேர்வு செய்த மோசமான அணி கீழே :

கிறிஸ் மார்டின், வால்ஷ், மெக்ராத், மோண்டி பனேசர், டஃப்னெல், ப்ரூஸ் ரெய்ட், இங்கிலாந்தின் டேவன் மால்கோம், ஒலங்கா, பொம்மி பாங்வா, அகர்கர், பும்ரா

Advertisement