அடி மேல் அடி வாங்கும் ஆஸ்திரேலிய வீரர்…மீண்டும் சர்ச்சையான வீடியோ வெளியானது !

- Advertisement -

ஏற்கனவே தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்டத்தில் மைதானத்தில் பந்துவீச்சின் போது பந்தை சேதப்படுத்திய புகாரில் கேமரூன் பேன்கிராப்ட் சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

CameronBancroft

- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கும் முன் ஓய்வறையிலிருந்து மைதானத்திற்கு செல்வதற்கு முன்னதாக கேமரூன் பேன்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் சக்கரையை எடுத்து போட்டுக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆட்டத்தின் போது சக்கரையை வைத்து பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் வீச சக்கரையை தனது பேண்ட் பாக்கெட்டில் கேமரூன் பேன்கிராப்ட் போட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஏற்கனவே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விசாரணை நடத்திய ஐசிசி, கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement