டிராவிட், சச்சின் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது ஆசிய வீரராக சுப்மன் கில் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

Gill and Sachin Dravid
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் நகரில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இதுவரை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளதோடு பல்வேறு சாதனைகளையும் தகர்த்து வருகிறார். ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 387 பந்துகளை சந்தித்த அவர் 269 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

டிராவிட் சச்சின் ஆகியோருடன் இணைந்த சுப்மன் கில் :

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது இன்னிங்ஸிலும் இதுவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள அவர் 100 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 80 ரன்களை தொட்டுள்ளார். மேலும் இந்த இன்னிங்ஸில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் சதம் அடிக்கவும் எளிமையான வாய்ப்பு கை மேல் காத்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நிலையிலே பல்வேறு சாதனைகளை தகர்த்து வரும் சுப்மன் கில் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையையும் முறியடித்துள்ளார். அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்தியுள்ள சாதனை யாதெனில் : இதுவரை சேனா நாடுகளில் ஒரே டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டே இரண்டு ஆசிய வீரர்களாக டிராவிட் மற்றும் சச்சின் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

கடந்த 2003-04 ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அடிலெய்டு மைதானத்தில் டிராவிட் ஒரே போட்டியில் 305 ரன்கள் குவித்திருந்தார். அதேபோன்று அதே ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரே போட்டியில் 301 ரன்கள் குவித்திருந்தார். இப்படி அவர்கள் இருவர் மட்டும் தான் இதுவரை சேனா நாடுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் அடித்த 2 ஆசிய வீரர்களாக இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மூன்றாவது ஆசிய வீரராக இந்து பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார். எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் அடித்ததோடு தற்போது இரண்டாவது இன்னிங்சில் 80 ரன்கள் கடந்த நிலையில் அவரும் டிராவிட், டெண்டுல்கர் ஆகியோருக்கு அடுத்து ஒரே போட்டியில் 300 ரன்களை கடந்துள்ளார்.

இதையும் படிங்க : கேப்டனாக அறிமுகமாகிய 4 இன்னிங்ஸ்களில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த – சுப்மன் கில்

இதன்மூலம் சேனா நாடுகளில் ஒரே போட்டியில் 300 ரன்களுக்கு மேல் அடித்த 3 ஆவது ஆசிய வீரர் என்பது மட்டுமின்றி டிராவிட் மற்றும் சச்சின் ஆகியோரையும் தாண்டி தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement