IND vs ENG : ரவி சாஸ்திரியை தொடர்ந்து விராட் கோலியை பிரேக் எடுக்க அறிவுறுத்தும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

Kohli
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோற்றது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அப்போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் இம்முறை கடந்த ஜுலை 1இல் துவங்கிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவாக மாறிய இங்கிலாந்தை இந்தியா எதிர்கொண்டது. ஆனால் அதை சமாளிக்க கடைசி நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா விலகியதால் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி வெற்றியை தாரை வார்த்தது.

- Advertisement -

ட்ரா செய்திருந்தால் கூட 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கலாம் என்ற நிலைமையில் அந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டு கடைசி நேரத்தில் சரணடைந்த இந்தியாவால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய மட்டுமே முடிந்தது. இந்த முக்கிய போட்டியில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்றவர்களை தவிர பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறியதே இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

ஏமாற்றிய விராட்:
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கடந்த வருடம் கேப்டனாக தாம் பெற்றுக் கொடுத்த முன்னிலையை இம்முறை பேட்ஸ்மேனாக சுமாராக செயல்பட்டு தானே வீணடித்தார். சர்வதேச அரங்கில் ஏற்கனவே 70 சதங்களை அடித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள அவர் கடந்த 2019க்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேலாக 3 வருடங்களுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

Virat kohli Shubman Gill

ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டான அவரது உடலிலும் ஆட்டத்திலும் ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு தெரிந்ததால் 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் தொடர்ச்சியாக விளையாடிய போதிலும் எந்த மாற்றத்தையும் அடையவில்லை. மேலும் சமீபத்திய தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சற்று ஓய்வெடுத்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு லேசான புத்துணர்ச்சியுடன் இங்கிலாந்து போட்டியில் களமிறங்கிய அவர் மீண்டும் 50, 70 போன்ற நல்ல ரன்களை கூட எடுக்க முடியாமல் சொதப்பினார்.

- Advertisement -

ஈகோ காட்டத்திங்க:
இத்தனைக்கும் 3 வகையான இந்திய அணியையும் ஐபிஎல் தொடரில் பெங்களூருவையும் வழி நடத்தியதால் ஏற்பட்ட கேப்டன்ஷிப் அழுத்தம் தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் படிப்படியாக அந்த பதவிகளிலிருந்து விலகி கடந்த ஜனவரியில் இருந்து சுதந்திரப் பறவையாக விளையாடி வருகிறார். அதனால் அடம் பிடிக்கும் 71-வது சதத்தை விரைவில் அடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் முன்பை விட மோசமாக செயல்படுவது வேதனையாக அமைந்து வருகிறது.

kohli

இந்நிலையில் தாம் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதால் பிரேக் எதுவும் எடுக்காமலேயே பார்முக்கு திரும்பி விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு உடனடியாக சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் விராட் கோலியை அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை நான் உன்னிப்பாக பார்க்கிறேன். ஐபிஎல் தொடருக்கு பின் அவர் சிறிய ஓய்வெடுத்தார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு பெரிய ஓய்வு தேவை என்பது போல் எனக்கு தெரிகிறது”

- Advertisement -

“அவர் 3 மாதங்கள் கிரிக்கெட்டை விட்டு விலகுவதற்கான தேவை உள்ளது. அதை செய்து ஒரு கடற்கரையில் போய் உட்காருங்கள். உங்களது குடும்பத்தினருடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். அதை செய்யாவிடில் 20 வருடங்களைக் கொண்ட உங்களின் கேரியரில் முன்கூட்டியே முடிவு ஏற்படலாம். ஏனெனில் அவர் மிகச் சிறந்த வீரர். 2 – 3 மாதங்கள் ஓய்வெடுப்பது அவரை பாதிக்குமா? நிச்சயமாக பாதிக்காது”

இதையும் படிங்க : IND vs ENG : மாதத்துக்கு 2 கேப்டன்களா – பிசிசிஐயை இந்திய ரசிகர்களே கலாய்க்கும் பரிதாப நிலைமை, காரணம் இதோ

“மாறாக உதவி செய்யும். இந்தியா – இங்கிலாந்தின் கிரிக்கெட் அட்டவணைகள் மிகவும் கொடுமையாக உள்ளது. அடுத்த சில வருடங்களில் மேலும் போட்டிகள் அதிகரிக்கலாம். எனவே ஒரு வீரர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது அசாத்தியமாகப் போகிறது. அதனால் அணி நிர்வாகங்கள் தங்களது வீரர்கள் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு தேவையான வேலைகளை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement