தீபக் சாஹரை அடுத்து கொரோனா உறுதியான பேட்ஸ்மேன். என்னங்க இதெல்லாம் – ரசிகர்கள் வேதனை

ruthraj
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

csk 1

- Advertisement -

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ம்தேதி தங்களது ஒட்டுமொத்த அணியுடனும் துபாய் சென்றது. ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் யார் யார் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த செய்தி சென்னை அணிக்கு ஏற்பட்ட முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சி.எஸ்.கே அணியின் முன்னணி பந்துவீச்சாளரும் , இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான தீபக் சாகர் கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ruturaj

இந்நிலையில் அடுத்த வீரராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ருதுராஜ் ஜெய்க்வாட் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்த ருதுராஜ் தற்போது சாஹரை அடுத்து கொரோனா பாதிப்பினால் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. 23 வயதான இவர் புனைவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருந்த இவருக்கு பயிற்சியை தொடங்கும் முன்னரே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் இவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ruturaj 1

மேலும் எத்தனை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக போகிறது என்று தெரியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கலங்கி உள்ளது. இந்த தொடரில் சி.எஸ்.கே அணி பங்கேற்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் விடயங்கள் பெரிய பாதிப்பாக அமையும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement