இந்த ஒரு இடத்திலேயே இந்தியாவிற்கு தேவையான நல்ல வீரர்களை பொறுக்கி எடுக்கிறார்கள் – அப்ரிடி பாராட்டு

Afridi
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை ஐபிஎல் தொடர் முற்றிலுமாக மாற்றி உள்ளதாக சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார் . தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது . இந்த தொடர் பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இந்திய ஐபிஎல் தொடர் பற்றியும் பேசினார்.

Chahar

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறியதாவது : ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் விளையாடுகின்றனர் . குறிப்பாக இந்திய இளம் வீரர்கள் அங்கு கொட்டி கிடக்கின்றனர். முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்படும் இளம் வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் விளையாடி தங்களது பயத்தைப் போக்கிக் கொள்கின்றனர்.

அந்த அனுபவத்தை வைத்து சர்வதேச அளவில் நெருக்கடி இல்லாமல் மக்கள் திரண்ட மைதானத்தில் மிகவும் எளிதாக விளையாடுகின்றர். ஐபிஎல் தொடர் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் கிரிக்கெட்டையும் மாற்றியுள்ளது. இதனால்தான் இந்திய இளம் வீரர்கள் சர்வதேச அளவில் நெருக்கடி இல்லாமல் விளையாடுகின்றனர் என்று அவர்களை பாராட்டி கூறியுள்ளார் சாகித் அப்ரிடி.

Pandya 1

அப்படி ஐ.பி.எல் தொடர் மூலம் பும்ரா, பாண்டியா, சாஹல், ஜாதவ், தீபக் சாகர் போன்ற பல திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அனைவரும் தற்போது இந்திய அணியில் முக்கிய வீரர்களாக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement