விராட் கோலி எல்லா பொறுப்பையும் அவர்கிட்ட கொடுத்துடலாம். அதுதான் நல்லது – ஷாஹித் அப்ரிடி ஓபன்டாக்

Afridi
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக டி20 உலக கோப்பை தொடருடன் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். மேலும் இனி வரும் தொடர்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

விராட் கோலி அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அவரால் பேட்டிங்கில் முழுதாக கவனம் செலுத்த முடியும். அதன் மூலம் அவரது பேட்டிங் பார்ம் மீண்டு வருவது மட்டுமின்றி இந்திய அணிக்கும் அது நல்லது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மாவிற்கு இந்திய அணியை வழிநடத்த நல்ல திறமை இருக்கிறது.

rohith

அவர் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் பொறுமையாக இருக்க கூடியவர். நான் அவரோடு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒன்றாக விளையாடி உள்ளேன். அவர் ஒரு நல்ல வீரர் தேவையான நேரத்தில் கோபத்தையும், பொறுமையையும் வெளிப்படுத்தக் கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி தோற்றதற்கு ஹசன் அலி காரணமா? சரியான காரணத்தை கூறிய – வீரேந்திர சேவாக்

அதனால் அவரை கேப்டனாக மாற்றுவது நல்லது தான். கோலி நல்ல பேட்ஸ்மேன் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் அனைத்து வகையான கேப்டன் பதவியில் இருந்தும் விலகினால் நிச்சயம் அவரால் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி மீண்டும் ரன்களை குவிக்க முடியும் என்று அப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement